(1761)
வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி,
நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் நாகரி கர்பெரி துமிளையர்
செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் தேவ ரிவர துருவம்சொல்லில்
அம்பவ ளத்திர ளேயு மொப்பர் அச்சோ ஒருவர் அழகியவா.
பதவுரை
|
தோள் மேல் |
– |
திருத்தோள்களிலே |
|
வம்பு அவிழும் துழாய் மாலை |
– |
பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது; |
|
ஆழியும் சங்கும் |
– |
சக்கரமும் சங்கமும் |
|
கையன |
– |
திருக்கைகளிலுள்ளன; |
|
ஏந்தி |
– |
(அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு |
|
நம்பர் |
– |
(இந்த) ஸ்வாமி |
|
நம் இல்லம் புகுந்து நின்றார் |
– |
நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்; |
|
நாகரிகர் |
– |
பெருமதிப்பராயிரா நின்றார்; |
|
பெரிதும் இளையர் |
– |
மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்; |
|
இவர் |
– |
இவருடைய |
|
வாயின் வண்ணம் |
– |
அதரத்தின் நிறம் |
|
செம் பவளம் |
– |
சிவந்த பவளமே; |
|
தேவர் இவரது |
– |
அமாநுஷரான இவருடைய |
|
உருவம் சொல்லில் |
– |
உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில் |
|
அம் பவளம் திரளேயும் ஓப்பர் |
– |
அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்; |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தோழீ! அவருடைய பரத்வ ஸௌலப்யங்களைச் சொல்லுகிறேன் கேளாய்; மணங்கமழ்கின்ற திருத்துழாய் மாலையைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாபோலே ஏந்தியுள்ளார்; இப்படிப்பட்ட பரத்வங்கொண்டு எட்டாதவராயிருக்கையன்றியே நாமிருக்குமிடத்தே வந்த புகுந்திருக்கின்றார்! பரமரஸிகராயிருக்கின்றார்; கௌமாரங்கலசின யௌவன பருவம் வாய்ந்தவராயிருக்கின்றார். இவருடைய திருஅதரத்தின் நிறமோ சிவந்த பவளம்போலிரா நின்றது; தேவாதி தேவராகத் தோற்றமுடையராயிருக்கின்றார். திருவுருவமோ பவளத் திரள்போல மிக விரும்பத் தகுந்ததா யிராநின்றது. உபமான மில்லாதபடி மிகலக்ஷணமான அழகுபடைத்த இவ்விஷயத்திற்கு நாம் உபமானமிட்டுச் சொல்லுவதும் ஹேயமென்னும்படி அழகிற் சிறந்தவர் காண் என்றாளாயிற்று.
கையன ஏந்தி கையிலுள்ளனவாக ஏந்தி என்று முரைக்கலாம். நம்பர் – எல்லாராலும் நம்பத்தகுந்தவர்; “நம்பும மேவும் நசையாகுமமே.”
இந்த விபூதியில் வந்து தோன்றினது கொண்டு ‘நம் இல்லம் புகுந்து நின்றா என்றது. அன்றியே மாநஸாநுபவமாகவுமாம். நாகரிகர் – வடமொழித் தத்திதாந்தநாமம்.
English Translation
Wearing a bee-humming Tulasi garland over his shoulders, bearing a conch and discus in his hands, the trusted Lord entered our house. He looked like a god, exceedingly youthful and decent. His lips were the hue of red coral. His whole frame looked like a heap of corals. Aho, was he beautiful.
