(1741)
பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்
உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்
மண்ணாளா வாள்நெடுங் கண்ணி மதுமலராள்
கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே.
பதவுரை
|
மண் ஆளா |
– |
பூமிப்பிராட்டியை ஆள்பவனே! |
|
வாள் நெடு கண்ணி |
– |
ஒளிபொருந்திப் பெருத்த கண்களையுடையவளும் |
|
மது மலராள் |
– |
மதுபெருகுகின்ற மலரிற் பிறந்தவளுமான ஸ்ரீ மஹா லக்ஷமிக்கு |
|
கண்ணாளா |
– |
வல்லபனானவனே! |
|
கண்ணபுரத்துறையம்மானே!- ; |
||
|
பெண் ஆனாள் |
– |
பெண்வடிவுகொண்டுவந்த பூதனையினுடைய |
|
பேர் இள கொங்கையின் |
– |
பெரிதும் இளையதுமான ஸ்தநத்திலுள்ள |
|
ஆர் அழல் போல் |
– |
நெருப்புப்போன்றதான |
|
உண்ணா |
– |
உண்ணமுடியாத |
|
நஞ்சு |
– |
விஷத்தை |
|
உண்டு |
– |
உறிஞ்சியுண்டு |
|
உகந்தாயை |
– |
திருவுள்ளமுவந்த வுன்னை |
|
நான் உகந்தேன் |
– |
நான் அடைந்து மகிழப் பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியேன், கைக்கொள்வதற்குரிய சிறந்த வஸ்து அல்லேனாயினும், பேய்ச்சியாகிய பூதனை உன்னைக் கொல்வதற்காகத் தன்முலையில் தடவிக்கிடந்த விஷமே உனக்கு விரும்பத்தக்கதானபோது அடியேன்தானோ விரும்பத்தகாதவனாகப் போகிறேன்; அந்த விஷத்திற் காட்டிலும் கொடியவனோ நான்? அப்படி கொடியவனேயாயினும், புருஷகாரம் பண்ணிச் சேர்ப்பிக்கவல்ல பிராட்டிமார் இணைபிரியாதிருக்க நான் இழக்க வேண்டுவதுண்டோ? என்கிற கருத்தையடக்கி இப்பாசுர மருளிச் செய்கிறார்.
English Translation
O Lord of Dame Earth! O Lord of lotus-lady Lakshmi! O Lord of Kannapuram! O Lord who delighted in sucking the terrible poison on the breasts of the hot agrees disguised as a beautiful nurse! My heart delights in you!
