(1728)

(1728)

கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை

மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,

எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்

அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.

 

பதவுரை

மானம் கை மதம் யானை

நீண்ட துதிக்கையையுடையதும் மதங்கொள்ளுமியல்வுடையதுமான கஜேந்திரனுடைய

இடர்

துயரத்தை

தீர்த்த

போக்கியருளின

கரு முகிலை

காளமேகம் போன்றவனும்

மை

மைபோன்ற நிறத்தையுடைய

மானம் மணியை

பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும்

அணி கொள் மரதகத்தை

அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும்

எம்மானை

எமக்கு ஸ்வாமியும்

எம்பிரானை

எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும்

ஈசனை

ஸர்வேச்வரனும்

எம் மனத்துள் அம்மானை

என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை

அடியேன் அடைந்து

அடியேன் ஆச்ரயித்து

உய்ந்து போனேன்

உஜ்ஜீவித்துப் போனேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அணி கொள் மரதகத்தை = பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரதகப்பச்சையையும் உவமை கூறுவதுண்டு “பச்ச மாமாலை போல் மேனி” என்ற திருமாலையுங்காண்க; காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் இவ்வுவமையினால் தொனிக்கும்.

 

English Translation

The dark-cloud Lord who rescued the elephant in distres is a dark precious gem, a beautiful emerald.  He is my Lord, my Master, and Lord of the Universe.  He resides in my heart as well, Attaining him I have found elevation of spirit.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top