(1671)
கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.
பதவுரை
|
கணம் மருவு |
– |
திரள் மிக்கிருந்துள்ள |
|
மயில் |
– |
மயில்களானவை |
|
அகவு |
– |
கூத்தாடப்பெற்ற |
|
கடி பொழில் சூழ் |
– |
மணம்மிக்க சோலைகளாற் சூழப்பட்டதாய் |
|
நெடு மறுகில் |
– |
பெரிய திருவீதிகளையுடைத்தாய் |
|
திணம் மருவு |
– |
திடம் பொருந்திய |
|
கனம் |
– |
கனகமயமான |
|
மதிள் |
– |
திருமதிள்களாலே |
|
சூழ் |
– |
சூழப்பட்டதான |
|
திருக்கண்ணபுரத்து, உறையும் |
||
|
மணம் மருவு தோள் ஆய்ச்சி |
– |
பரிமளம் பொருந்திய தோள்களை யுடையளான இடைச்சி |
|
ஆர்க்க |
– |
(தாம்பினால்) கட்ட |
|
உரலோடும் போய் |
– |
உரலோடு கூடச் சென்று |
|
புணர் மருதம் |
– |
இரட்டை மருதமரங்கள் |
|
இற |
– |
இற்று முறிந்து விழும்படி |
|
நடந்தாற்கு |
– |
நடைகற்ற பெருமானுக்கு |
|
என் பொன் வளை இழந்தேன்-. |
||
English Translation
Tirukkannapuram is surrounded by strong walls, wide streets and fragrant graves with peacocks in flocks dancing everywhere. Here resides the Lord who was fethered to a mortar by the fragrant coiffured Dame Yasoda; he then toddled between the Marudu trees and destroye them, Alas, I have lost my beautiful golden bangles to him.
