(1664)

(1664)

தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,

இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்

துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்

அரங்கமே என்ப திவள்தனக் காசையே.

 

பதவுரை

தரங்கம் நீர்

பேசினும் தண் மதி காயினும்

திரைக்கிளர்ச்சியையுடைய கடல் கோஷம் செய்தாலும் குளிர்ந்த சந்திரன் காய்ந்தாலும்

(இவள்)

இரங்குமோ

இளைப்பாளோ? (இளைக்கமாட்டாள்.) (ஏனென்னில்)

எத்தானை நாள் இருந்து எள்கினாள்

நெடுநாளே பிடித்தும் (இவற்றிலே) ஈடுபட்டிருக்கிறாளன்றோ

துரங்கம் வாய் கீண்டு உகந்தானது

குதிரை வடிவாக வந்த அசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து மகிழ்ந்த பெருமானுடைய

தொன்மை ஊர்

அநாதி திவ்யதேசமாகிய

அரங்கம் என்பதே

திருவரங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பதே

இவள் தனக்கு ஆசை

இவளுடைய ஆசையா யிருக்கிறது.

 

English Translation

She hears the rear of the sea, she feels that shine of the cool moon, and thins inside.  Alas, how long she has been engaged in these!  Her strong desire is for srirangam, the original abode jof her krishna who fore apart the jaws of the horse kesin and enjoyed himself!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top