(1407)
ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே.
பதவுரை
|
ஆ நிரை |
– |
பசுக்கூட்டங்களை |
|
மருவி மேய்த்த |
– |
விரும்பி மேய்த்தவனாம் |
|
அணி அரங்கத்து அம்மானை |
– |
திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து, |
|
காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த |
– |
விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும் |
|
மலி புகழ் சேர் |
– |
நிரம்பிய கீர்த்தியையுடையதும் |
|
நா மருவு |
– |
நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான |
|
தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும் |
– |
இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் |
|
தாம் மருவி வல்லார் மேல் |
– |
தாமே விரும்பிக் கற்குமவர்களிடத்து |
|
தீ வினை சாரா |
– |
பாவங்கள் அணுகமாட்டா |
English Translation
This garland of sweet Tamil songs is on the Lord who protected the cows, the Lord of beautiful Arangam, sung by the adorable kalikanri, poet of lasting fame. Those who master it will be saved from evil karmas.
