(1436)
நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே,
பதவுரை
|
நால் வகை வேதம் |
– |
நான்கு வேதங்களிலும் |
|
ஆறு அங்கம் |
– |
ஆறு வேதாங்கங்களிலும் |
|
ஐந்து வேள்வி |
– |
பஞ்சமஹாயஜ்ஞங்களிலும் |
|
வல்லார் |
– |
ஸமர்த்தர்களாய். |
|
மேலை வானவரில் மிக்க தேவதியர் |
– |
மேலுலகத்திலுள்ள தேவர்களிற் காட்டிலும் மேம்பட்ட பிராமணோத்தமராய், |
|
ஆதி காலம் |
– |
வெகுகாலந்தொடங்கி |
|
சேல் உகள் வயல் திருப்பேர் |
– |
மீன்கள் துள்ளுங் கழனிகளையுடைய திருப்பேர் நகரில் |
|
செம் கண் மாலோடும் |
– |
செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரனோடுகூட |
|
வாழ்வார் |
– |
நித்யவாஸம் பண்ணுமவராய் |
|
சீலம் மா தவத்தர் |
– |
நற்குணமும் நல்லொழுக்கமுமுடையரான பிராமணருடைய |
|
சிந்தை ஆளி |
– |
உள்ளத்தை (த்தனக்கு இருப்பிடமாகக்கொண்டு) ஆள்கின்ற எம்பெருமான் |
|
என் சிந்தையான் |
– |
என்னுடைய ஹ்ருதயத்தில் நித்யவாஸம் பண்ணுமவன். |
English Translation
Those adept in the four Vedas, the five Sacrifies and the six Angas, praise the Lord constantly. He resides in Ten-Tirupper where the Vedic seers better than even gods reside with excellent penance amid Sel-fish-dancing fields. How easily have I attained him through chanting his names!
