(1434)

(1434)

வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,

கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான்,

திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை

வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே,

 

பதவுரை

தான்

யசோதை நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாகிய தான்

வெண்ணெய் அமுது செய்ய

வெண்ணெயை (அளவில்லாதபடி திருடி) உண்டவளவிலே

ஆய்ச்சி

யசோதையானவள்

வெகுண்டு

சீற்றங்கொண்டு

மத்து ஓச்சி

தயிர்கடையும் மத்தினால் அடிப்பதாக ஓங்கி

கண்ணி ஆர் குறுகயிற்றால் கட்ட

முடிச்சுகள் நிறைந்த சிறிய தாம்பினால் கட்டிவைக்க

வெட்டென்றிருந்தான்

இசைந்திருந்தவனும்:-

திண்ணம் மா மதிள்கள் சூழ்ந்த

திடமான பெரிய மதிள்களாலே சூழப்பட்ட

தென் திருப்பேருள்

தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிறவனும்

வேலை வண்ணனார்

கடல்போன்ற நிறத்தையுடையனுமான பெருமானுடைய

நாமம்

திருநாமங்களை

நாளும்

நாள்தோறும்

வாய் மொழிந்து

சொல்லி

உய்ந்த ஆறு ஏ

நான் உஜ்ஜீவித்தபடி என்னே!-

 

English Translation

The Lord appeared as Krishna, ate butter and incurred the wrath of his mother, who took the chaurning rope and bound him to a mortar. He resides amid strong-walled Ten-Tirupper, he is our ocean-hued Lord.  How easily have I attained him through chanting his names!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top