(1382)
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும்,நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.
பதவுரை
|
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் |
– |
தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய் |
|
நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் |
– |
நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான |
|
தென் அரங்கம்; |
||
|
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக |
– |
வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக |
|
அம்பு தன்னால் முனிந்த அழகன் |
– |
பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது. |
|
இடம் என்பர் |
||
English Translation
Oh, they say the Southern Arangam, -surrounded by golden walls, where Indra the king of gods leads the celestials in offering worship, -Is the abode of the beautiful Lord who rained arrows and despatched beautiful Mandadari’s husband to heaven.
