(1322)

(1322)

அரக்க ராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,

குரக்க ரசனென் றும்கோல வில்லி யென்றும், மாமதியை

நெருக்கு மாட நீடுநாங்கை நின்ம லன்தா னென்றென்றோதி,

பரக்க  ழிந்தா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே!


பதவுரை

என் மடந்தை

என் பெண்ணானவள்

அன்று அரக்கர் ஆவி மாள

முன்பொரு காலத்தில் ராக்ஷஸர்களினுடைய பிராணன் முடியும்படியாக

ஆழ் படல் சூழ் இலங்கை செற்ற

ஆழ்கடலால் கூழப்பட்ட லங்காபுரியைப் பொடிபடுத்தின

குரங்கு

வாநர வீரர்களுக்கு

அரசன் என்றும்

ஸ்வாமியாவன் என்றும்,

கோலம் வில்லி என்றும்

அழகிய வில்லையுடையவன் என்றும்,

மா மதியை நெருக்கும் மாடம் நீடு நாங்கை,

அழகிய சந்திரனை திரியவொட்டாமல் தடைசெய்கிற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற

நின் மலன் என்று என்று ஓதி

பரிசுத்தஸ்வபாவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு

பரக்கழிந்தான்

பெரும்பழிக்கு இடமானவளாய்

பார்த்தன் பள்ளிபாடுவாள்–

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரக்கழித்தாள் – ‘பரக்கு அழிந்தாள்’ என்று பிரித்து, பரக்கு  என்பதற்கு அடக்கமென்று பொருள் கூறி, ‘அடக்கங்கெட்டாள்’ என்றுரைப்பர் சிலர். அதுநிற்க : கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்து  வாலிவதைப் படலத்தில் -(79) “அரக்கரோ ரழிவுசெய்து கழிவரேலதற்கு வேறோர், குரக்கினத்தரசைக் கொல்ல மனநெறி கூறிற்றுண்டோ?  இரக்கமெங்குகுத்தாயென்பால் எப்பிழை கொண்டாயப்பா, பரக்கழி யிதுநீ பூண்டாற் புகழையார் பரிக்கற்பாலார்?” என்ற செய்யுளில் ‘பரக்கழி’ என்றும் பதத்தின் பிரயோகம் காண்கிறது;  அவ்விடத்துரையில் “பரக்கழி – பெருநிந்தை; பெருந்தீங்குமாம்” என்றிருக்கக் காண்கிறோம்.  ஆகவே இங்கே பரக்கழிந்தாள் என்பதற்கு – ‘பெரும்பழி விளையப்பெற்றாள்’ எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.  பெரிய வாச்சான்பிள்ளையும் பலவிடங்களில் இங்ஙனமேவி யாக்கியான மருளிச்செய்யக் காண்கிறோம்.  நாச்சியார் திருமொழியில் (12-3) “கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற” என்றவிடத்தில், ‘பரக்கழிக்கை – பழிவிளைக்கை’ என்பது வியாக்கியானம்.

 

English Translation

“Leader of the monkey army! Wielding mighty bow and arrow, Marching O’er a bridge on ocean you destroyed the Rakshasa clan!” “O My faultless Lord in Nangai, -mansions rise and stop the Moon!” Losing all her grace and charm my daughter sings of Parttan-Palli, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top