(1402)

(1402)

நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன்

ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே,

பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்,

ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே,


பதவுரை

நீர் ஆய் அழல் ஆய் கெடு நிலன் ஆய் நின்றானை

ஜலஸ்வரூபியாம் அக்நிஸ்வரூபியாயும் விசாலமான பூமிஸ்வரூபியாயும் இருப்பவனும்,

அன்று

ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து

அரக்கன் ஊர்

இராவணனுடைய நகரமான இலங்கையை

கண்டார் பின் காணாமே

முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி

அழலால் உண்டானை

அக்நிக்கு இரையாக்கினவனும்,

பேர் அழல் ஆய்

பெரியபடபாக்னி ஸ்வரூபியும்

பெரு விசும்பு ஆய்

பரமபதத்துக்கு நிர்வாஹகனும்

பின்

அதற்குமேலே,

மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானை

வைதிக ப்ராஹ்மணர்களினுடைய மந்த்ரபூதமான ஹவிஸ்ஸை அக்நிமுகத்தாலே அமுதுசெய்பவனுமான பெருமாளை

கண்டது தென் அரங்கத்தே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீர் அழல் நிலன் என்று மூன்று பூதங்களைச் சொன்னது – காற்று, விசும்பு என்னும் மற்ற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமாகும்.  பஞ்ச பூதங்களுக்கும் நியாமகன் என்றவாறு.  ஸகலசேதநா சேதநங்களையும் எம்பெருமான் சரீரமாகக் கொண்டவனாதலால் இங்ஙனே சொல்லக் குறையில்லையென்க.

கண்டார் பின் காணாமே அரக்கனூர் அழலாலுண்டானை – “மன்னு தண்பொழிலும் வாவியும் மதிளும் மாடமாளிகையும் மண்டபமும்” என்று திவ்ய தேசங்களை வருணிப்பதுபோலவே இலங்கையின் ஸந்நிவேசமும் இருந்தது; அப்படிப்பட்ட செல்வமெல்லாம் ஒருநொடிப் பொழுதில் நீறாகி யொழியும்படி தீக்கு இரையாக்கினவனென்கை.

பேரழலாய் – கடலில் உறைகின்ற பாடபாக்நி ஸ்வரூபியாயிருப்பவனென்கை.  அன்றியே, பகவத்கீதையில் (15-14) சொல்லுகிறபடியே கடித்தும் உறிஞ்சியும் குடித்தும் நக்கியும் நம்மால் உட்கொள்ளப்படுகிற அன்னங்களைப் பசநம் செய்வதற்காக உள்ளே உறைகின்ற ஜாடராக்கியும் எம்பெருமானேயென்று கூறப்படுதலால் அதனைச் சொல்லிற்றாகவுமாம்.

பெருவிசும்பாய் – வடமொழியில் ‘பரமாகாசம்’ என்று பரமபதம் சொல்லப்படுதலால் அதுவே தமிழில் ‘பெருவிசும்பு’ என்ற சொல்லால் சொல்லப்படுகிறது; நித்யவிபூதிக்கு நியாமகனாயிருப்பவன் என்கை.

மறையோர் மந்திரத்தின் ஆரழலாலுண்டானை = அந்தணர்கள் இயற்றும் வேள்விகளில் இந்திரன், ஸோமன், வருணன் என்று பலபல தேவதைகளின் பெயர்களைச்சொல்லி ஆஹுதிகள் செய்தாலும் “தேபி மாமேவ கௌந்தேய! யஜந்தி” என்றும் “அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்கா” என்றும் கீதையில் பெருமான் தானே பணித்தபடியே அந்த ஆஹுதிகளெல்லாம் எம்பெருமான்றனக்கே சென்று சேர்கின்றனவாதலால் இவனே ஸர்வயஜ்ஞஸமாராத்யன் என்கை.  ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைத் திருவரங்கத்திலே காணப்பெற்றேன் என்றாராயிற்று

 

English Translation

The Lord who is manifest as water, fire and the wide sky, -then in the yore, he burnt the city of Landa to dust with his fire spitting arrows, -the Lord who the sacrificial fires attain, the Lord who grants heaven, -I have seen him in Southern Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top