(1319)
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,
வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,
செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
பதவுரை
|
பஞ்சி அன்ன மெல் அடியாள் |
– |
பஞ்சுபோன்று மென்மையான பாதங்களையுடைய என்மகளானவள், |
|
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும் |
– |
கம்ஸனால் ஏவப்பட்ட கடூரமான கோபத்தையடைய (குவலயா பீடமென்னும்) யானையைத் தொலைத்த இளையோன் என்று சொல்லிக்கொண்டும், |
|
வஞ்சம் மேவி வந்த பேயின் |
– |
கபடத்தை மேற்கொண்டு வந்த பூதனையினுடைய |
|
உயிரை உண்ட மாயன் என்றும் |
– |
பிராணனை முடித்த ஆச்சரியசக்தியுக்தன் என்று சொல்லிக்கொண்டும், |
|
செம் சொலாளர் நீடு நாங்கை |
– |
செம்மையான சொற்களைக் கற்ற அந்தணர் நீண்டகாலமாக வாழப்பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற |
|
தேவதேவன் என்று என்று ஓதி |
– |
தேவாதிதேவன் என்று பல கால் சொல்லிக்கொண்டும. |
|
பார்த்தன்பள்ளி பாடுவாள்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பஞ்சியன்ன – பஞ்சி – பஞ்சு; போலி
English Translation
“Crue! Kamsa’s Killer-elephant’s killer lord, -O, Bull-spirited!” “Wonder-Lord who drank the milk and took the life of Ogress, pretty!” Deva-deva, Lord of Nangai living amidst the Vedic seers!’ How my cotton-tender-footed daughter sings of parttan-Palli, O!
