(1429)
வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே,
பதவுரை
|
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் |
– |
மரக்கலங்கள் நிறைந்திருக்கப்பெற்ற ஸப்த ஸாகரங்களும் |
|
மலையும் |
– |
குலபர்வதங்களும் |
|
வானகமும் |
– |
ஆகாசமும் |
|
மற்றும் |
– |
அதற்குமேலே |
|
அம் கண் மா ஞாலம் |
– |
அழகிய இடமுடைத்தான பரந்தபூமியும் (ஆகிய |
|
எல்லாம் |
– |
எல்லாவற்றையும் |
|
அமுது செய்து |
– |
(பிரளயகாலத்தில்) விழுங்கி |
|
உமிழ்ந்த |
– |
பிறகு வெளிப்படுத்தின |
|
எந்தை |
– |
ஸ்வாமியும் |
|
திங்கள் மா முகில் அணவு |
– |
சந்திர மண்டலத்தையும் மேக மண்டலத்தையும் அளாவியிருக்கிற |
|
செறி பொழில் |
– |
நெருங்கிய சோலைகளையுடைத்தான |
|
தென் திருப்பேர் |
– |
தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற |
|
எங்கள் மால் |
– |
எம்பெருமானுமாகிய |
|
இறைவன் |
– |
ஸர்வேச்வரனுடைய |
|
நாமம் ஏந்தி |
– |
திருநாமங்களைத் துதித்து |
|
நான் உய்ந்த ஆறு ஏ |
– |
நான் வாழ்ந்தவிதம் என்னே!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திங்கள்மாமுகில் – சந்திரன் தோன்றுகிற மேகமண்டலம் என்னவுமாம்.
English Translation
The Lord who swallowed the seven oceans, the hills, the sky, the Earth and all else, then brought them out again, is my father. He resides and mansions that touch the moon, In fragrant bowered ten-Tiruper. How easily have I attained him through chanting his names!
