(1275)
அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.
பதவுரை
|
அன்றியலாணன் ஆயிரம் தோளும் துணிய |
– |
கோபித்து எதிரிட்ட பாணாஸுரனுடைய ஆயிரந்தோள்களும் அறுத்துவிழும்படி |
|
அன்று ஆழி தொட்டானை |
– |
அக்காலத்தில் திருவாழியைப் பிரயோகித்தவனும் |
|
மின்திகழ் குடுமி வேங்கடம் மலை மேல் மேவிய |
– |
ஒளிவிளங்கானின்ற சிகரத்தையுடைய திருவேங்கடமலையின் மேல் பொருந்தியிருப்பவனும் |
|
வேதம் கல் விளக்கை |
– |
வேதங்களால் காணக்கூடிய நல்ல விளக்கானவனும், |
|
தென்திசை திலதம் அனையவர் |
– |
தென்திசைக்குத் திலகம் போன்ற மஹான்கள் வாழ்கிற |
|
நாங்கை செம்பொன்செய் |
||
|
கோயிலின் உள்ளே; |
||
|
மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானே |
– |
ஸ்ரீ வைஷ்ணவகோஷ்டி விளங்கத் திருவுள்ளமுவந்துநிற்பவனுமான பெருமானை |
|
நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மன்றதுபொலிய – பலர்திரட்சியாகக் கூடுமிடத்திற்கு ‘மன்று’ என்று பெயர்; ‘நாங்கை நாலாயிரம்’ என்ற பழமொழியின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தவிடமாயிருந்தது பற்றி “மன்றதுபொலிய” என்கிறார் என்னலாம்: (அது-முதல்வேற்றுமைச்சொல்லுருபு.)
English Translation
Then in the yore to vanquish the thousand-armed Bana, he wielded his gold discus. He is the resident Venkatam Lord who shines like a beacon in Vedic chants, Stars-of-the-South’ seers residing in Nangur, -Semponse! Koyil is in the midst. Seeing my precious Lord, granting prosperity, I have found my spiritual elevation.
