(1250)
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.
பதவுரை
|
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் |
– |
நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் |
|
தான் ஆய |
– |
ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற |
|
எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -; |
||
|
ஆனத |
– |
அழிவில்லாத |
|
பெரு செல்வத்து |
– |
மிக்க ஐச்வரியத்தையுடையராய் |
|
அருமறையோர் |
– |
அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற |
|
நாங்கை தன்னுள் – ; |
||
|
தேன் ஆரும் மலர் பொழில் சூழ் |
– |
தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த |
|
திருத்தேவனார் தொகையே. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “பல்லுயிருந்தானாய வெம்பெருமான்” என்றவிடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை எடுத்துக்காட்டுகிற விசேஷோக்தி வருமாறு :- “தானும் குடும்பமுமாய்க் கலநெல் ஜீவிப்பானொருவனை ‘உனக்கென்ன வேணும்?’ என்றால், ‘எனக்குக் கலநெல்வேணும்’ என்னுமிறே தன்னபிமானத்துக்குள்ளே யடங்குகையாலே. அப்படியே, தானே இதுக்கெல்லாம் அபிமாநியாயிருக்கிற ஸர்வேச்வரன் – ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு ப்ரகாரமாய்ப் புறம்பு ஒருவரின்றிக்கே உபயவிபூதியும் தன்நிழலிலே யொதுங்கும்படியிருக்கையாலே தலைவனானவன் வந்து நித்யவாஸம் பண்ணுகிற தேசம்.” ஆனாத – ஆன்–பகுதி
English Translation
The celestial world, the Earth-world, the souls and all else, –our Lord and masters is all these. He resides at Nangur, with the Vedic seers, who command the abiding wealth of the Vedas, amid nectar-dripping fragrant groves in Tiruttevanar Togai.
