(1242)

(1242)

கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு,

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம் அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே,

அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும் அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும்,

அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

 

பதவுரை

கண்டவர் தம் மனம் மகிழ

பார்த்தவர்களெல்லாருடைய மனமும் ஆநந்தமடையும்படி

மாவலி தன் வேள்வி

மஹாபலியின் யாகபூமியிலே

களவின் மிகு சிறு குறள் ஆய்

வஞ்சனை மிகுந்த சிறுத்த வாமநரூபியாய்க் கொண்டு

மூ அடி என்று இரந்திட்டு

மூவடிநிலம் தா என்று யாசித்து

அண்டமும்

மேலுலகங்களையும்

இவ் அலை கடலும் அவனிகளும்

அலையெறிகின்ற இக்கடல்களோடு கூடின பூமண்டலத்தையும்

எல்லாம் அளந்தபிரான்

மற்றுமெல்லாவற்றையும் அளந்து கொண்ட எம் பெருமாள்

அமரும் இடம்

எழுந்தருளி யிருக்கும் தவ்ய தேசம்.

வுளம் கொள் பொழில் அயலெ

அழகிய சோலைகளின் அருகே

அண்டம் உறு முழவு ஒலியும்

ஆகாசத்தளவும் வியாபிக்கிற வாத்யகோஷங்களும்

வுண்டு இனங்கள்

வண்டுத்திரள்களின் ரீங்காரமும்

அரு மறையின் ஒலியும்

அருமையான வேதங்களின் கோஷமும்

மடவார் சிலம்பின் ஒலியும்

மாதருடைய காலணிகளின் ஓசையும்

ஆண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும்   அரிமேய விண்ணகரம்

அண்டபித்தியளவுஞ் சென்று அலையெறிகிற (பிரளயக்) கடலின் கோஷம் போலே விளங்கப்பெற்ற  திருநாங்குகூரிலே  வணங்கு

 

English Translation

Then in the yore, the Lord came to Mabali’s great Sacrifice as a beautiful innocent-looking manikin-lad, pleasing the hearts of all who saw him. He asked for a gift of three strides of land, then grew and took the whole Earth, the seven seas, the seven continents and all else. He resides permanently in Nangur amid fertile fields, where the sounds of musical instruments, the hum of bees, the chanting of the Vedas, the jingle of anklets and the roar of the ocean rend the air. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top