(1188)

(1188)

வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,

என் சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,

அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும்

செந்தழல் புரையும் திருவாலி யம்மானே.

 

பதவுரை

அம் தளிர்அணி ஆர் அசோகின் இளதளிர்கள் அவை

அழகிய தளிர்களாலுண்டான அழகு பொருந்திய அசோக மரத்தினது இளந்தளிர்களானவை

எங்கும்

எல்லாவிடங்களிலும் பாளியிருப்பதனாலே

செம் தழல் புரையும்

சிவந்த அக்கி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற

திரு ஆலி அம்மானே

திருவாலியில் எழுந்தருளியிருக்கும் பெருனானே!, எனக்குச் செல்ல மானவனே!

என் ஆர்உயிரே

எனது அருமையான உயிர்போன்றவனே!,

வந்து

நீயாகவே நிர்ஹேதுக் விஷயீகாரம்பண்ணி

உனது அடியேன் மனம் புகுந்தாய்

உன்னடியனான என்னுடைய மனத்திலே வந்து புகுந்தருளினாய்;

புகுந்ததற்பின்

அப்படி நீ வந்து புகுந்த பின்பு

வணங்கும் என் சிந்தனைக்கு

வணக்கமுற்ற என் மனத்துக்கு

இனியாய்

போக்யனானாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-   எம்பெருனானுக்கு பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமாகையாலே. இப்போது அப்பெருமான் இவ்வாழ்வாரது திருவுள்ளத்திலே வந்து குடிகொண்டான். தம்முடைய பிரார்த்தனே யின்றியே அவன் தானாகிவே விரும்பி வந்து புகுந்து மகிழ்ச்சி உள்ளடங்காமல்.  “வந்துனதடியேன் மனம் புகுந்தாய்” என்று வாய்விட்டுப் பேசுகின்றார். (புகுந்ததற்பின் வணங்குமென் சிந்தனைக் கினியாய்!) அவன்றானாகவே வந்து புகுந்தாலும் ‘உன்னை இங்கிருக்க வொட்டேன்’ என்று அடித்துத் துரத்தும் பாவிகளுமுண்டே ஸம்ஸாரத்தில்; அப்படியல்லாமல்” இசைவித்தென்னையுன் தாளிணைக் கீழிருத்துமம்மானே 3202” என்னுமாபோலே பெரு நன்றி பாராட்டின தமக்குத் தித்தித்திருந்தமை சொன்னபடி. ஆழ்வாருடைய திருவாராதனத் திருமூர்த்திக்குச் சிந்தனைக்கினியானென்று திருநாமம் ப்ரஸித்தம். இத்திருநானங் கொண்ட திவ்யமங்கள விக்ரஹம் இன்றைக்கும் கலியன் ஸந்நிதியில் ஸேவை ஸாதிப்பர்.

***-  அருமை + உயிர், ஆருயிர். “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்” 3293 என்னலாம்படி எனக்குத் தாரகங்களெல்லாம் தானேயாயிருப்பன் என்றபடி. எம்பெருமானுடைய நினைவாலே, பக்தர்கள் அவனுக்குத் உயிராயிருப்பன்; “அறிவிலேனுக்  கருளாய் அறிவாயிருயிரானாய்” 3322 என்ற விடத்து அறிவார்களுக்கு (ஜ்ஞாநிகளுக்கு) உயிராயிருப்பவனே! என்றும் அறிவார்களே உயிராகவுடையவளே! என்றும் இரண்டுவகையான நிர்வாஹங் காண்க.

***- (அந்தளிரித்யாதி.) இத்தலத்தின் சோலைப் புறமெங்கும் அசோக மரங்கள் அடர்ந்து கிடப்பதால் அவற்றின் செந்நிறமான தளிர்களின் ஒளி எங்கும் வீசி அக்நிஜ்வாலே பரவியிருப்பதுபோல் விளங்குகின்றது; ஆகவிப்படி எங்கும் நெருப்பக் கொளுத்தினாற்போலே அழகியதாய்த் திகழ்கின்ற திருவாலிமா நகரில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமானே! நீ உன்னுடைய சிந்தையிற்புகுந்து தித்தித்திருக்கின்றாய் என்றாராயிற்று.

“சிந்தனைக்கினியாய்” என்பதை முற்றாகக்கொள்ளாமல் விளியாகக் கொண்டால் ‘வாழ்க’ என்றொரு வினைமுற்று வருவித்து முடிக்க.

 

English Translation

O, Lord of Tiruvali, my wealth! Freshly sprouted red leaves on beautiful Asoka trees everywhere paint the landscape with fire. You are my life breath, you have entered the heart of this lowly self. My heart worships you, you are indeed sweet to my heart.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top