(1182)
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.
பதவுரை
|
தெவ் ஆய மறம் மன்னர் குருதி கொண்டு |
– |
சத்துருக்களாகிய வீரராஜாக்களினுடைய ரத்தத்தாலே |
|
திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்தி |
– |
தன் வம்சத்தில் மாண்டவர்களுக்குத் தர்ப்பணம் செய்து செய்த பரசுராமனாக அவதரித்தவனாயும் |
|
வெம் வாய மா கீண்டு |
– |
கொடிய வாயையுடைய குதிரையாக வந்த வசுரனைக் கிழித்தொழித் தவனாயும் |
|
வேழம் அட்ட |
– |
கம்ஸனது யானையை முடித்தவனாயுமுள்ள |
|
விண்ணவர்கோன் |
– |
தேவாதி தேவனுடைய திருவடிகளை தாள் அணைவீர் சேரவிரும்பு மன்பர்களே! குவளை விகிர்தம் மாதர் அவ்வாயலாள் |
|
நெடுங் கண் காட்ட |
– |
கருநெய்தற் பூக்களானவை விலகூணைகளான ஸ்திரிகளுடைய அப்படிப்பட்ட அழகிய நீண்ட கண்கள் போன்று விளங்கவும் |
|
அரவிந்தம் முகம் காட்ட |
– |
தாமரை மலர்களானவை (அவர்களது முகம் போன்று விளங்கவும் ) |
|
அருகே ஆம்பல் செம் வாயின் திரள் காட்டும் |
– |
அருகிலுள்ள செவ்வல்லி மலர்களானவை (அவர்களது சிவந்த வாய்களின் கூட்டம் போன்று விளங்கவும் பெற்ற |
|
வயல் சூழ் |
– |
கழனிகளால் சூழப்பட்ட நெல் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகை-பகைவர் , திருத்தி – த்ருப்தி என்னும் வடசொல்லின் விகாரம் – தர்ப்பணத்தைச் சொன்னபடி விகிர்தமாதர் இத்யாதி – விகிர்தம் – வடசொல், “ வேறுபாடுடைய “ என்று பொருள் மற்றெல்லாரும் போலன்றியே வைலக்ஷண்யம் பொருந்தியமாதர் என்ற படி, அவர்கள், குவளை போன்ற கண்ணழகும் கமலம் போன்ற முகவழகும் செவ்வாம்பல் போன்ற வாயழகுமுடையாய் இத்தலத்தில் வாழ்கின்றாரென்றவாறு
English Translation
Destroying twenty one mighty kings with axe he performed mane worship through their spilled blood. When the horse-demon Kesin charging came on, he tore the jaws apart, –Lord of gods, he. In the fields of Kali where water tanks abound, red lotus shows the face of different women, Blue lotus shows their eyes red lily their lips, Seerama Vinnagar, O People, go to!
