(1171)
வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண,
முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட,
திலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே.
பதவுரை
|
வளை கை நெடுங் கண் மடவார்ஆய்ச்சியர் |
– |
வளையல்களணிந்த கைகளையும் நீண்ட கண்களையுமுடைய இடைப்பெண்கள் |
|
அஞ்சி |
– |
பயப்பட்டு |
|
அழைப்ப |
– |
(‘காளிங்க மர்த்தனமாகிற இந்த பயங்கரமான செய்தியை வந்து பாருங்கள்’ என்று) அழைக்க, |
|
அண்டர் |
– |
இடையர்கள் |
|
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம்புக்கு |
– |
மலர்ந்த தாமரைப் பூக்களையுடைய வொரு பொய்கையின் குளிர்ந்த கரையிலே சென்று |
|
காண |
– |
பார்த்தவளவிலே |
|
முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில் |
– |
முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே |
|
நின்று |
– |
நின்று கொண்டு |
|
அது வாட திளைத்து |
– |
அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து |
|
அமர் செய்து |
– |
உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான் |
|
சித்திரகூடத்து உள்ளான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தவளத் தமிழ் தாமரைப் பொய்கை தளைத்து அவிழ் – கட்டுண்டிருந்து (பிறகு) அவிழ்ந்த ” என்று பொருளாய் விகஸிந்தபடியைச் சொல்லிற்றுகிறது. தாமரைகள் புஷ்பிக்கக்கூடிய பொய்கை என்று கருத்து, இப்படிப்பட்ட பொய்கையையன்றோ காளியன் தன் விஷாக்கியினால் கொதிப்பித்துக் கொண்டு கிடந்தானென்கை, தடம் – வடசொல் கரை.
English Translation
The fair-bangled wide-eyed cowherd dames wailed in concern when the Lord entered the cool waters of the lotus-lake and, -watched by all, -danced over the hoods of the poison fanged serpent. The mischief maker resides in Tillai Tiruchitrakudam.
