(117)

(117)

 

ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய

வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து

ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்

வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.

 

பதவுரை

வேய்

மூங்கில் போன்ற
தடந்

பெரிய
தோளி

தோள்களையுடையனான
ஆய்ச்சி

யசோதையானவன்
ஆழிபிரான்

சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று

அக்காலத்திலே
புறம்புல்கிய

புறம்புல்குவதைக் கூறிய
சொல்

சொல்லை
விட்டுசித்தன்

பெரியாழ்வார்
மகிழ்ந்து

(தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த

(உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்

தமிழ்ப்பாசுரமாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்

ஓதவல்லவர்கள்
வாய்த்த

(மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை

நல்ல புத்திரர்களை
பெற்று

அடைந்து
மகிழ்வர்

ஆநந்திப்பர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

‘ஈந்த’ என்ன வேண்டியது – செய்யுளின்பம் நோக்கி ஈத்த என்று கிடக்கிறது.  நன்மக்கள் – சிஷ்யர்களென்றுமாம்.  இப்பத்து – ஒன்பது திருமொழிகளிலேயே நூறுபாசுரங்களாய் விட்டபடியால் இவ்வொன்பது திருமொழியிலேயே முடிந்ததென்க.

அடிவரவு – வட்டு கிண்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி மெச்சூது.

 

English Translation

This decad of sweet songs by Vishnuchitta regales beautiful Yasoda’s “embrace- from-behind” game with the discus Lord.  Those who master is will enjoy the company of good children.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top