(1153)

(1153)

கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,

கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,

வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,

தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே.

 

பதவுரை

கூன் உலாவிய மடந்தைதன்  மடந்தைகள் கொடும் சொலின்

கூனேறின மந்தரையென்னும் ஸ்திரியினுடைய கொடிய பேச்சுக்காக திறத்து

இளகொடியோடும் கான் உலாவிய

இளங்ககொடிபோன்ற பிராட்டியோடகூட    காட்டுக்கொழுந்தருளின

கருமுகில் திரு நிறத்தவன் இடம்

காளமேகம் போன்ற வடிவையுடைய பெருமானுக்கு இடமாவது;

கவின் ஆரும்

அழகு நிரம்பிய

வான் உலாவிய மதிதவழ் மால் வரை மாமதிள் புடை சூழ

ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற சந்திரன் தவழப்பெற்ற பெரிய மலையும் பெரிய மதிளும் பக்கங்களில் சூழ்ந்திருக்கப்பெற்றதும்

தேன் உலாவிய செழு பொழில் தழுவிய

வண்டுகள் ஸஞ்சரிக்கின்ற அழகிய சோலைகளால் சூழப்பட்டதுமான

திரு அயிந்திபுரம்-;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சந்திரமண்டலத்தைளவும் ஓங்கின மலைகளாலும் மதிள்களாலும் பொழில்களாலும் சூழப்பெற்றதாம் இத்தலம், “மால்வரை மாமதிள்” என்றதை உம்மைத் தொகையாகக் கொள்ளாமல் உவமைத் தொகையாகக் கொண்டு, பெரிய மலைபோன்ற மதிள்களாற் சூழப்பெற்றதென்றலுமொன்று.

 

English Translation

By the words of the hunchback woman the cloud-hued Lord went into exile in the forest with his young wife. He resides in Tiruvayindirapuram where mountains and mansions touch the sky and bees hover over fertile wetland tracts.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top