(1149)

(1149)

மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,

பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,

பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,

தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே.

 

பதவுரை

மின்னும் ஆழி அம் கையவன்

ஜ்வலிக்கின்ற திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனும்

செய்பவள் உறைததரு திருமார்வன்

பிராட்டி நித்யவாஸம் பண்ணுகிற திருமார்வையுடையவனும்

பன்னு நால் மறை பல் பொருள் ஆகிய பரன் இடம்

ஓதப்பட்டு வருகிற நான்கு வேதங்களின் பலவகைப் பொருள்களும் தானேயாயிருப்பவனுமான பரம புருஷனுக்கு வாழுமிடம் (எதுவென்றால்)

வண்டு

வண்டுகளானவை

வரை சாரல்

மலைப் பக்கங்களில்

பின்னும் மாதவி பந்தலில் பெடை வர

நெருங்கி யிருக்கின்ற குருக்கத்திப் பந்தலில் நின்றும் தம் பேடைகள் (பெண் வண்டுகள்) தம்மிடம் வந்து சேர்வதற்காக

பிண அவிழ் கமலத்து தென்ன என்று இன் இசை முரல்தரு

கட்டு அவிழ்கிற தாமரைப்பூவிலே இருந்துகொண்டு தென்னா தெனாவென்று இனிய இசைகளைப் பாடா நிற்கப்பெற்ற

திரு அயிந்திரபுரம்-.

 

English Translation

The Lord with the resplendent discus in hand, with lotus-dame Lakshmi on his chest, the substance of the Vedas, resides in Tiruvayindirapuram where bumble bees on the Madavi bowers call ‘Tena Tena’ in sweet musical tones, waiting for their mates, -held captive in the closed lotus flowers of the night, -to join them.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top