(1121)
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை
யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து,
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
பதவுரை
|
மஞ்சு உயர் |
– |
மேக மண்டலம் வரையில் உயர்ந்ததும் |
|
மா மணி குன்றம் |
– |
சிறந்த ரத்னங்களை யுடையதுமான கோவர்த்தனகிரியை |
|
ஏந்தி |
– |
(குடையாக) எடுத்துப் பிடித்து |
|
மா மழைகாத்து |
– |
பெருமழையைத் தடுத்தவராயும், |
|
அன்று |
– |
கம்ஸ னரண்மனையினுட் புகும்போது |
|
ஒரு மாயம் ஆனை அஞ்ச |
– |
ஒப்பற்றதும் மாயச் செயல்களை யுடையதுமான (கம்ஸனுடைய) யானையானது நடுங்கும்படியாக |
|
அதன் மருப்பு |
– |
அவ் யானையின் கொம்பை |
|
வாங்கும் |
– |
பறித்தெறிந்தவராயுமுள்ள |
|
ஆயர்கொல் |
– |
கோபாலகிருக்ஷ்ணரோ? இவர் |
|
மாயம் அறிய மாட்டேன் |
– |
(இன்னாரென்று நிச்சயிக்க முடியாத இந்த) ஆச்சரியத்தை அறிகிறேனில்லை; |
|
வெம் சுடர் ஆழியும் |
– |
தீக்ஷ்ணமான சோதியையுடைய சக்கரத்தையும் |
|
சங்கும் |
– |
சங்கையும் |
|
ஏந்தி |
– |
தரித்துக்கொண்டு |
|
முன் |
– |
கண்ணெதிரே |
|
வேதம் ஓதுவர் |
– |
வேதங்களை ஓதிக்கொண்டிருப்பவராய் |
|
நீதி வானத்து அம்சுடர் போன்ற இவர் |
– |
முறை தவறாத பரமபதத்திலேயுள்ள பரஞ்சோதி போன்றவரான இவர் |
|
ஆர் கொல் என்ன–; |
||
|
அட்டபுயகரத்தேன் என்றார்-. |
||
English Translation
Lifting a tall mountain that reached the clouds, he stopped the rains. Frightening a mighty elephant in rut, he took its tusk. Is he that cowherd lad, I thought, not knowing the stranger, by his radiant discus and conch and his Vedic chant-like speech, he looked like a god. Who could this be, I wondered, “ I am the lord of Attabuyakaram”, he said.
