(1079)
காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
பதவுரை
|
அமரர்க்கு அரையன் அவன் |
– |
தேவர்களுக்குத் தலைவனான இந்திரனானவன் |
|
கண்டு நிற்க |
– |
பார்த்துக்கொண்டிருக்கையில் |
|
முனே |
– |
அவன் கண் முன்னே |
|
“காண்டாவனம்”; என்பது ஓர் காடு அது |
– |
‘காண்டாவனம்’ என்று ப்ரஸித்தமான வொருகாட்டை |
|
ஆர் அழல் |
– |
அக்நி பகவான் |
|
மூண்டு உண்ண |
– |
மேல் விழுந்து உட்கொள்ளும்படியாக |
|
முனிந்ததுவும் |
– |
சீறி நியமித்தவனும், |
|
அது அன்றியும் |
– |
அதுவுந்தவிர, |
|
முன் |
– |
முன்பு(பாரதப்போரில்) |
|
உலகம் பொறை தீர்த்து |
– |
பூமியின் பாரங்களைத்தீர்த்து |
|
ஆண்டான் |
– |
உலகங்களை ரக்ஷித்தவனும் |
|
அவுணன் அவன் |
– |
இரணியாசுரனுடைய |
|
அகலம் மார்பு |
– |
அகன்ற மார்பு |
|
உகிரால் |
– |
(திருக்கை) நகங்களாலே |
|
வகிர் ஆக |
– |
இருபிளவாம்படி |
|
முனிந்து |
– |
சீறி |
|
அரி ஆய் நீண்டான் |
– |
நரசிங்கமாய் வளர்ந்திட்டவனும் |
|
குறள் ஆகி |
– |
(முதலில்) வாமநாவதாரஞ் செய்து |
|
நிமிர்ந்தவனுக்கு |
– |
(பிறகு) திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனுமான பெருமானுக்கு |
|
இடம் |
– |
இடம் (எதுவென்றால்) |
|
மா மலை ஆவது நீர்மலை-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “காண்டவவநம்” என்பது ‘காண்டாவனம்’ என்று கிடக்கிறது.
இவ்வனத்தை அக்நிபகவான் உண்ணும்போது தேவேந்திரன் அதைத் தடுக்க முயன்றும் பயன்படவில்லை யென்பது விளங்க “ கண்டு அவன் நிற்கமுனே” எனப்பட்டது.
காண்டவவனத்தை எரிக்க அநுமதித்த முகத்தால் பூமி பாரங்களைத் தொலைத்ததும், தானே நேரில் பல துஷ்டஜனங்களைக் கொன்றொழித்து அம்முகத்தாலும் பூமி பாரங்களைத் தொலைத்தும் அருளின எம்பெருமானுறையுமிடம் திருநீர் மலை என்றாராயிற்று.
அரையன்-அரசன், முனே-முன்னே. வகிர்-பிளவு.
English Translation
Kandavanam, the forest belonging to Indra the king of gods, was being consumed by a terrible forest fire. In his very presence our Lord angrily swallowed the fire. He waged a terrible war to rid the Earth of its burden. He came as a man-loin and tore apart the chest of Hiranya. He came as a manikin and grew to cover the Earth. Tirunirmalai is His great hill abode.
