(1075)
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
பதவுரை
|
பள்ளியில் ஓதி வந்த |
– |
பள்ளிக்கூடத்தில் வாசித்து விட்டு வீட்டுக்கு வந்த |
|
தன் சிறுவன் வாயில் |
– |
தனது மகனான ப்ரஹ்லாதனுடைய வாயில் |
|
ஓர் ஆயிரம் நாமம் |
– |
விலக்ஷணமான ஸஹஸ்ர நாமங்கள் |
|
ஒள்ளிய ஆகி போத |
– |
அழகாக உச்சரிக்கப்பட்டு வர |
|
ஆங்கு |
– |
அக்காலத்திலே |
|
அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி |
– |
அதை எள்ளளவும் பொறுக்கமாட்டாதவனாய் (இரணியன்) |
|
பிள்ளையை சீறி வெகுண்டு |
– |
அந்த ப்ரஹ்லாதன்மீது மிகவும் கோபித்து |
|
தூண் புடைப்ப |
– |
தூணைத் தட்டினபோது |
|
பிறை எயிறு அனல் விழி பேழ் வாய் |
– |
பிறைபோன்ற பற்களையும் நெருப்புப்பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையுமுடைய |
|
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை |
– |
தெளிசிங்கப் பெருமாளாகத் திருவவதரித்த தேவனை |
|
திருவல்லிக்கேணி கண்டேன். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டில் தெள்ளியசிங்கம் என்று ஆழ்வாரருளிச்செய்தது கொண்டே திருவல்லிக்கேணியி லெழுந்தருளியுள்ள அழகிய சிங்கப்பெருமாளுக்குத் தெளிசிங்கப்பெருமாள் என்று திருநாமம் வழங்கலாயிற்று; ‘துள சிங்கப்பெருமாள்’ என்று பலரும் வழங்குவது பிழையென றுணர்க.
சீறிவெகுண்டு = ஒரு பொருட்பன் மொழி; மிகவும் கோபங்கொண்டு என்றபடியாம்.
English Translation
Hearing his son, – who returned from school, – recite the chant of thousand names beautifully, the Asura Hiranya lost his temper, and tortured the child, then kicked a pillar, when Lo! With fiery eyes and gaping mouth showing crescent-like teeth, a terrible man-lion sprang out and killed the Asura. I have seen him in Tiruvallikkeni.
