(1063)
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
பதவுரை
|
தொண்டர் |
– |
அடியவர்கள் |
|
மிண்டி |
– |
நெருக்கமாகத் திரண்டு |
|
நம்பி சோத்தம் என்று தொடர்ந்து அழைக்கும் |
– |
‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற |
|
ஆத்தன் |
– |
ஆப்தனான |
|
நம்பி |
– |
ஸ்வாமியாய் |
|
செம் கண் |
– |
செந்தாமரைக் கண்ணனான |
|
நம்பி ஆகிலும் |
– |
ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும், |
|
முனிவர் |
– |
ஸநகர் முதலிய ரிஷிகள் |
|
தேவர்க்கு எல்லாம் |
– |
தேவர்களுக்குள் பெரிய |
|
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் |
– |
‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான் |
|
எவ்வுள் கிடந்தான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தவிசேஷம் சோத்தம் என்பதாம்; ‘ஸ்தோத்ரம்’ என்ற வடசொல் சோத்த மெனச் சிதைந்து கிடக்கிறது என்பாருமுளர்.
ஆப்த: என்ற வடசொல் ஆத்தனெனத் திரிந்தது; நம்புதற்குரியவ னென்கை.
English Translation
The dear Lord whom devotees throng and incessantly call, “our Lord”, is the lotus-eyed lord, who is also the elder Lord of the celestials, the lord worshipped by the three-eyed Lord and the four-faced lord. He reclines in Evvul.
