(1482)

(1482)

விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண்

சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன்,

மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு,

நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

 

பதவுரை

விலங்கும்

மானையும்

கயலும்

மீனையும்

வேலும்

வேற்படையும்

ஒண் காவியும்

அழகிய செங்கழுநீர்ப்பூவையும்

வென்ற

தோற்கடித்த

கண்

கண்களை யுடையரும்

சலம் கொண்ட சொல்லார் தாங்கள்

கபடமுள்ள சொற்களை யுடையருமான பெண்கள்

சிரித்து

பரிஹாஸம் பண்ணி

இகழாத முன்

திரஸ்கரிப்பதற்கு முன்னே,-

மலங்கும் வராலும் வாளையும்

பலவகைப்பட்ட மீன்கள்

பாய்

துள்ளி விளையாடுகின்ற

வயல்

கழனிகளாலே

சூழ்தரு

சூழப்பட்டதும்

நலம் கொள்

நன்மைமிக்கதுமான

நறையூர்

திருநறையூரை

நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வெருண்டாற்போல் பார்க்கிறபார்வைக்கு, மான்நோக்கும், பளபளவென்று மிளிர்தற்கும் புடைபரந்து நீண்டிருக்குந் தன்மைக்கும் மீனும், கூர்மையாகப் பாயுந்தன்மைக்கு வேலும் கண்ணுக்கு ஒப்பாகுமாதலால் “விலங்குங்கயலும் வேலுமொண்காவியும் வென்றகண்” எனப்பட்டது.

மலங்கு என்பதும் வரால் என்பதும் வாளை என்பதும் மீன்களின் அவாந்தர ஜாதி பேதம்

 

English Translation

O Heart! Before artful dames with eyes that surpass the fawn, the spear and the lotus laugh in derision, let us go to the Lord surrounded by fertile fields and waters where Malangu, Varal, and Valai fish dance, -He resides in Naraiyur,-and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top