(1553)

(1553)

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,

முனியே திருமூழிக் களத்து விளக்கே,

இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய

கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே!

பதவுரை

பனி ஏய்

–

பனிமிக்கிருந்துள்ள
பரம் குன்றின்

–

சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற
பவளம் திரளே

–

பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே!
முனியே

–

(அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே!
திருமூழிக் களத்து

–

திருமூழிக்களமென்னுந் திருப்பதியில்
விளக்கே

–

விளக்குப்போல் விளங்குமவனே
இனியாய்

–

பரமபோக்யனே!
தொண்டரோம் பருகு

–

தொண்டரான அடியோங்கள் பானம பண்ணுதற்கு உரிய
இன் அமுது ஆய

–

இனிய அமுதமானவனே!
கனியே

–

கனிபோன்றவனே!
உன்னை கண்டு கொண்டு

–

உன்னை ஸேவித்து
உய்ந்தொழிந்தேன்

–

உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பனி மிகுந்திருந்துள்ள இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலே எல்லார்க்கும் விரும்பவுரியனாய்க் கொண்டு ஸந்நிதிபண்ணி யிருக்குமவனே! என்பது முதலடியின் கருத்து.  இப்பெரிய திருமொழியில் இரண்டாந் திருப்பதிகத்தில் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற திருப்பதி இது.

முனியே! – மநநம் பண்ணுமவனே! என்கை.  இச்சேதநர் அறிந்த போதோடு அறியாதபோதோடு வாசியற எப்போதும் இவர்களுக்கு ஹிதத்தைச் சிந்திக்குமவனே! என்றவாறு.

திருமூழிக்களத்து விளக்கே! – திருமூழிக்களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயேப்ரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே! என்கை திருமூழிக்களம் – மனைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் ஒன்று; நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம்.

இனியாய்! – ‘இனியான்’ என்பதன் ஈறு திரிந்தவளி.  ‘இனியாய தொண்டரோம்’ என்பது வழங்கிவரும் பாடம்; அதுவியாக்கியானத்திற்குச் சேராது.

 

English Translation

O Coral spring residing in the snowy peaks of the Himalayas! O Thinker! O Light of Tirumulikkalam!  O Sweet ambrosia of devotees! O Fruit  By seeing you my spirk has been set free.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top