(1633)
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே.
பதவுரை
|
முழு நீலமும் |
– |
பூர்த்தியாகக் கறுத்திருக்கிற நீலோற்பவமும் |
|
ஆம்பல் மலரும் |
– |
ஆம்பல் மலர்களும் |
|
அரவிந்தமும் |
– |
தாமரைகளும் |
|
கழுநீரொடு |
– |
செங்கழுநீர்ப் பூக்களும் |
|
விரவி |
– |
சேர்ந்து |
|
மடவாரவர் |
– |
(அங்குள்ள) மாதர்களினுடைய |
|
கண் |
– |
கண்கள் போலவும் |
|
வாய் |
– |
அதரம் போலவும் |
|
முகம் |
– |
முகம் போலவும் |
|
அலரும் |
– |
விகஸிக்கப்பெற்ற |
|
செழு நீர் வயல் |
– |
செழித்த நீர் நிறைந்த வயல்களினால் |
|
தழுவும் |
– |
சுற்றுஞ் சூழப்பட்ட |
|
சிறுபுலியூர், சலசயனத்தை-, |
||
|
தொழும் நீர்மையது உடையார் |
– |
தொழுகையையே ஸ்வபாவமாக வுடையவர்களினுடைய |
|
அடி |
– |
திருவடிகளை |
|
தொழுவார் |
– |
தொழுமவர்கள் |
|
துயர் இலர் |
– |
துக்கமற்றவரார். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிறுபுலியூரும் வேண்டா; அங்குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா; அதிலுள்ள பெருமானும் வேண்டா; அத்திருக்கோயிலைத் தொழுவதையே இயற்கையாகவுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவருளர், அவர் திருவடிகளே சரணமென்றிருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடு மென்கிறார்.
வொண்ணாதபடியிருக்கு மென்கிறார் முன்னடிகளில்; நீலோற்பலங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களினுடைய கண்களாகவும், அரக்காம்பல்களைப் பார்த்தால் அப்பெண்களது அதரமாகவும், தாமரைப்பூக்களைப் பார்த்தால் அவர்களது முகங்களாகவும் விளங்குகின்றமையால் உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசிதெரிவரிதாம்.
English Translation
The blue water lily, the red water lily and the lotus flower together liken the eyes, lips and face of the maidens in Sirupuliyur Salasayanam by fertile fields. Those who worship those who offer worship there, will have no despair.
