(1618)
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
பதவுரை
|
(உலகத்தவர்களே!) |
||
|
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் |
– |
எவ்விடத்திலும் நிறைந்து பரவிய கீர்த்தியையுடைய நான்கு வேதங்களும் |
|
ஐந்து வேள்விகளும் |
– |
பஞ்சமஹாயஜ்ஞங்களும் |
|
கேள்விகளும் |
– |
(மற்றும் இன்றியமையாத)நூற்கேள்விகளும் (ஆகிய இவற்றை) |
|
இயன்ற |
– |
இயற்கையாகவே அறிந்துள்ள |
|
தன்மை |
– |
குணத்தையுடையராய் |
|
அம் கமலத்து அயன் அனையார் |
– |
(எம்பெருமானுடைய) அழகிய நாபீ கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனையொத்தவரான அந்தணர்கள் |
|
பயிலும் |
– |
நித்யவாஸஞ்செய்கிற |
|
செல்வத்து |
– |
சிறப்பையுடைய |
|
அணி |
– |
அழகிய |
|
அழுந்தூர் |
– |
திருவழுந்தூரில் |
|
நின்று |
– |
வந்துநின்று |
|
உகந்த |
– |
(அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற |
|
அமரர் கோ |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமான் (யாவனென்னில்,) |
|
செம் கமலம் திரு மகளும் |
– |
செந்தாமரை மலரில் வாழ்கின்ற ஸ்ரீதேவியும் புவியும் – பூமிதேவியும் |
|
செம் பொன் தனது திரு அடியின் இணை வருட |
– |
(தனது) சிவந்த பொன்மயமான இரண்டு திருவடிகளையும் தடவவும் |
|
முனிவர் ஏத்த |
– |
மஹர்ஷிகள் புகழ்ந்து துதிக்கவும் |
|
வங்கம் மலி தட கடலுள் – |
– |
அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலில் |
|
அனந்தன் என்னும் வரி அரவின் |
– |
திருவனந்தாழ்வானென்கிற புள்ளிகளை யுடைய ஸர்ப்பசயனத்தில் |
|
துயின்ற |
– |
(பள்ளி கொண்டு) யோக நித்திரை செய்கின்ற |
|
மாயோன் |
– |
ஆச்சரியமான குணமுடையவன்;;; |
|
காண்மின் |
– |
காணுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கேள்வியாவது – கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல்; இது, கற்றவர்க்கு அக்கற்றதனாலாகிய அறிவை உறுதிப்படுத்தவும் கல்லாதவர்க்கு அவ்வறிவை உண்டாக்கவும் வல்லது. வேதம் முதவியன அவ்வூரிலுள்ள அந்தணர்களிடம் இயற்கையில் நிறைந்திருத்தலால் அவர் ஒவ்வொருவரும் பிரமனை யொத்திருப்பரென்கிறது. அன்றியே, தமது தவ வலிமையால் அவ்வூரிலுள்ள அந்தணர் ஒவ்வொருவரும் பிரமனைப் போல ஸ்ருஷ்டிக்க வல்லவரெனினுமாம். பயிலுதல் – எப்பொழுதும் நெருங்கி வஸித்தல். அணி – இந்நிலவுலகத்திற்கு ஆபரணம் போன்ற, அழுந்தூர் எனினுமாம்.
English Translation
Lotus-dame Lakshmi and Dame of Earth too, pressing the golden feet, while Munis sing songs, in the deep Ocean of Milk reclining on a bed of hood-serpent, Lord,-behold, ye! sound of the chanting of vedas and five sacrifices and Prasnas fill the sky-space, Brahma-like Vedic seers learn and teach in Ani-alundur where resides the Lord of all gods!
