(1583)

(1583)

பண்டேன மாயுலகை யன்றிடந்த பண்பாளா என்று நின்று,

தொண்டானேன் திருவடியே துணையல்லால் துணையில்லேன் சொல்லு கின்றேன்,

வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை எம்பெருமா னடியார் தம்மை,

கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் கண்ணிணையும் களிக்கு மாறே.

 

பதவுரை

பண்டு அன்று

–

முன்பொருகால்

ஏனம் ஆய்

–

மஹாவராஹரூபியாய்

உலகை

–

பூமியை

இடந்தா

–

கோட்டாற் குத்தியேடுத்துவந்த

பண்பாளா

–

குணசாலியே!

என்று நின்று

–

என்று சொல்லி நிலைநின்று

தொண்டு ஆனேன்

–

(உனது திருவடிகட்கு) அடிமை யானேன்;

திரு அடியே துணை அல்லால்

–

(உனது) திருவடிகளே துணை யாவதன்றி

துணை இலேன்

–

வேறு துணையுடையேனல்லேன்;

சொல்லுகின்றேன்

–

இ சத்தியம்;

வண்டு ஏந்தும்

–

வண்டுகளைத் தரிக்கின்ற

மலர்

–

பூக்களையுடைய

புறவில்

–

தோப்புகளை யுடைத்தான

வண் சேறை

–

அழகிய திருச்சேறையிலுள்ள

எம்பெருமான்

–

ஸாரநாதப் பெருமாளுடைய

அடியார் தம்மை

–

பக்தர்களை

கண்டேனுக்கு என் நெஞ்சும்

–

ஸேவிக்கப்பெற்ற எனது மனமும்

கண் இணையும்

–

இரண்டு கண்களும்

களிக்கும் ஆறு

–

களிக்கும் விதம்

இது காணீர்

–

இதோ பாருங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்பு வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹாவராஹ மூர்த்தியாய், அண்டபித்தியிலே சேர்ந்திருந்த பூமியை அதில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்துக் கொணர்ந்த நீர்மையை யுடையவனே! என்று இடையறாதே சொல்லிக்கொண்டு அந்நீர்மையிலே தோற்று உனது திருவடிகளே எனக்குத் தஞ்சம்; வேறொரு புகலை உடையேனல்லேன்; இங்ஙனே ஆணையிட்டுச் சொல்லக்கடவேன்.  இப்படி திண்ணிதாக அடியேன் விண்ணப்பஞ்செய்வது எது கொண்டென்னில்; வண்டுகள் மாறாத பசுமலரையுடைத்தான சோலைகளாற் சூழப்படட் திருச்சேறையிலெழுந்தருளியுள்ள பெருமாளுடைய அடியார்களை ஸேவித்த மாத்திரத்தில் என்னுடைய நெஞ்சும் கண்களும் களித்கிறபடியைக் காணுங்கோள்; இவ்வளவு பரிபாசம் பெற்றேனான பின்பு அந்த அத்யவஸாயம் திடமாயிருக்கத்தட்டுண்டோ வென்கிறார்.

 

English Translation

O Lord who came in the yore as a bear and lifted the Earth! Other than the refuge of your lotus feet, I have no refuge, I declare.  Having seen your devotees in Ticcherai amid bee-huming groves, see the way, my heart and my eyes rejoice!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top