(3893)

(3893)

அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட

வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்

நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே.

 

பதவுரை

யாம்

அடியோங்கள்

அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி

உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி

நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட

ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு

வென்று

விரோதிகளைத் தொலைத்து

இம் மூவுலகு அளித்து உழல்வான்

இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய

நாம் நமது இடர் கெட

நாம் நம்முடைய இடர் தீரும்படி

திருமோகூர்

திருமோகூரிப்பதியை

இனி நன்று நணுகும்

இப்போது நன்றாகக கிட்டக்  கடவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார். இத்தலத்தில் நான்முகன் சிவன் முதலான தேவர்கள் வந்து பணிகின்றார்களாம், அப்போது அவர்கள் சொல்லும் பாசுர மென்னெனில், “அன்றி யாமொரு புகலிடமிலம்’’ என்று பலகாலும் இதைச் சொல்லி அலற்றுகிறார்களாம்., அன்றி என்றது “ திருமோகூரப்பனையன்றி’’ என்றபடி. ப்ரயோஜநாந்தர பரரான அத்தேவர்களுடைய வாயில் அநந்யப்ரயோஜநர்கள் சொல்லக்கூடியதான இப்பாசுரம் வெளிவருவதற்குத் தகுதியில்லை, ஆயிரம் தங்கள் ப்ரயோஜனம் கைபுகுமளவும் வஞ்சனையாக இப்பாசுரம் பேசுவார்களாம். அவர்கள் அப்படி வஞ்சகமாகப் பேசினாலும் எம்பெருமான் அவர்களுடைய அநிஷ்ட நிவாரணத்தையும் இஷ்டப்ராபணத்தையும் செய்தே நிற்பனென்கிறது ’வென்றிம் மூவுலகளித்துழல்வான்’ என்பது. வென்று என்றது, அவர்களுடைய விரோதிகளை வெனறு என்றபடி.

 

English Translation

The four-head Brahma, Siva and all the gods worship him and seek his protection as their only refuge.  Victoriously he roams, protecting the worlds, Good if we too can reach him in his Tirumogur

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top