(2704)
காரார் கடல் பொலும் காமத்தராயினார் ஆரே பொல்லாமை அறிவார் அதுனிற்க
ஆரானு மாதானும் அல்லலவள் காணீர் வாரார் வனமுலை வாசமததை வென்று
ஆரானும் சொல்லப்படுவாள் – அவளும்தன்
(2705)
பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள்
ஊராரிகழ்ண்திடப் பட்டாளே, மற்றெனக்கிங்கு
(2706)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நானவனை
காரார் திருமேனி காணுமலவும்போய் சீரார் திருவேங் கடமே திருக்கொவல்
ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே பேரா மனுதிருத்தான் வெள்ள றையே வெஃகாலே
பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை
(2707)
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்
(2708)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்
(2709)
பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ
(2710)
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல்
