(3803)
ஓராயிரமாய் உலகேழளிக்கும்
பேராயிரங்கொண்டதோர் பீடுடையன்
காராயின காளநன்மேனியினன்
நாராயணன் நங்கள் பிரானவேன.
(3804)
அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்றெல்லாமுமறிந்தனமே.
(3805)
அறிந்தவவேத வரும்பொருள்நூல்கள்
அறிந்தனகொள்க அரும்பொருளாதல்
அறிந்தனரெல்லாம் அரியைவணங்கி
அறிந்தனர் நோய்களறுக்கும்மருந்தே.
(3806)
மருந்தே நங்கள்போகமகிழ்ச்சிக் கென்று
பெருந்தேவர்குழாங்கள் பிதற்றும்பிரான்
கருந்தேவனெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனைச் சோரேல்கண்டாய்மனமே.
(3807)
மனமேயன்னை வல்வினையேனிரந்து
கனமேசொல்லினேன் இதுசோரேல்கண்டாய்
புனமேலிய பூந்தண்டுழாயலங்கல்
இனமேதுமிலானை அடைவதுமே.
(3808)
அடைவதுமணியார் மலர்மங்கைதோள்
மிடைவதுமசுரர்க்கு வெம்டோர்களே
கடைவதும் கடலுளமுதம் என்மன
முடைவதும் அவற்கேயொருங்காகவே.
(3809)
ஆகம்சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என்மனம்
ஏகமெண்ணு மிராப்பகவின்றியே.
(3810)
இன்றிப்போக இருவினையுங்கெடுத்து
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்
நின்றவேங்கடம் நீணிலத்துள்ளது
சென்றுதேவர்கள் கைதொழுவார்களே
(3811)
தொழுதுமாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு
எழுதுமென்னாமிது மிகையாதலில்
பழுதில்தோல்புகழ்ப் பாம்பணைப்பள்ளியாய்
தழுவுமாற்றியேன் உனதாள்களே.
(3812)
தாளாதாமரையான் உனதுந்மதியான்
வால் கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாகும் அமரர்கள்
நாளுமேன்புகழ்கோ உனசீலமே.
(3813)
சீல மெல்லையிலானடிமேல் அணி
கோலநீள் குருகூர்ச்சடகோபன் சொல்
மாலையாயிரந்துள் இவைபத்தினின்
பாலர் வைகுந்தமேறுதல் பான்மையே.
