5 – 9 மானேய்

ஒன்பதாந் திருமொழி

(3429)

மானேய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய,

வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,

தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்ரை,

கோனாரை அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ?

விளக்க உரை

(3430)

என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?

பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,

தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்

நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே?

விளக்க உரை

(3431)

சூடும் மலர்க்குழலீர்! துயராட்டியே னைமெலிய,

பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,

மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்

நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே?

விளக்க உரை

(3432)

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?

பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,

மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்

நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே.

விளக்க உரை

(3433)

நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,

மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,

கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,

என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?

விளக்க உரை

(3434)

காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,

பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,

சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,

மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே?

விளக்க உரை

(3435)

பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,

ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,

மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,

நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோறுமே?

விளக்க உரை

(3436)

நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,

ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,

மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,

நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே?

விளக்க உரை

(3437)

கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,

குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,

மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,

சுழலின் மலிசக்கரப் பெருமானது ¦ தால்லருளே?

விளக்க உரை

(3438)

தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,

தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,

நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,

நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே?

விளக்க உரை

(3439)

நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,

சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,

நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,

சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top