(2696)

ஆரானும் அல்லாமை கேட்டங்கள் அம்மனையும்

போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாய்

தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே — மற்று

ஆரானுமல்லனே யென்றொழிந்தாள்..            (2696)

 

பதவுரை

எங்கள் அம்மனையும்

(அதற்குமேல்) என்னுடைய தாயானவள்

மற்றுஆரானும் அல்லாமை சிக்கென கேட்டு

வேறு எந்த தேவதாந்தரமும் இந்த நோய்க்குக் காரணமல்லவென்வதை த்ருடமாகக் கேட்டுக்கொண்டு

போர் ஆர் வேல் கண்ணீர்!

யுத்தத்திலே பொருந்தின வேல் போனற கூரிய கண்களை யுடைய தோழிமார்களே!

அவன் ஆகில்

(இந்நோய் செய்தவன்) அந்த எம்பெருமானே யாகிற பக்ஷத்தில்

பூ துழாய் தாராது ஒழியுமே

(இவளுக்கு உத்தேச்யமான) திருத்துழாய்ப் பிரஸாதத்தை தந்தருளாமற்போவனோ,

தன் அடிச்சி அல்லளே

(இவள்) அவன்றனக்கு அடிமைப்பட்டவளன்றோ,

மற்று ஆரானும் அல்லனே என்று ஒழிந்தான்

(தைவாதீனமாக) வேறொருவனும் இந்நோய் செய்தவன்ன்றே என்று சொல்லிவிட்ட விசாரமற்றொழிந்தாள் (என்தாய்),

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்ஙனே கட்டுவிச்சி சொல்லி முடித்தவுடனே என் தாயானவள் “அடிகுறத்தி! இந்நோய் செய்த்து அந்தப் பரதேவதைதானே, வேறொரு தேவதாந்தரமு மன்றே, இது ஸந்யந்தானா?“ என்று பலதடவை கேட்டு அவனே தானென்பதை த்ருடமாகத் தெரிந்துகொண்டு “புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடிய பிரானருளாவிடுமே“ என்கிற விச்வாஸந்தோற்ற “இனி நாம் இவள் திறந்துக் கவலைப்படக் காரணமில்லை, இந்நோய் செய்தவன் அப்பெருமானேயாயிருக்கிற பக்ஷத்தில், தனது தாஸபூதையான இவளை ஒருகாலும் கைவிடமாட்டான், “தன் மன்னு நீள்கழல் மேற்றண்டுழாய் நமக்கன்றி நல்கான்“ என்றபடி திருத்துழாய்ப் பிரசாதந் தந்து அருள் செய்தே தீருவன், மற்ற தேவதாந்தரமாகிலன்றோ நாம் அஞ்சவேண்டுவது, எம்பெருமானே யென்று நமக்கு ஸத்யமாகத் தெரிந்தபின்பு இனி என்ன கவலை“ என்று சொல்லிவிட்டு விசாரமற்றுப் போய்விட்டாள்.

“போரார் வேற்கண்ணீர்“ என்றது –அசற் பெண்டுகளைப் பார்த்துத் தாய் பண்ணின ஸம்போதநம்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top