(2691)-(2692)

சீரார் சிரமறுத்து செற்றுதுகந்த செங்கண்மால்

போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை

கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை           (2691)

 

சீரார் திருமார்ப்பிம் மெல்கட்டி செங்குருதி

சோரா கிண்டந்தனை குங்குமத்தாள் கொட்டி

ஆரவெழுந்தன் அரியுருவாய் அன்றியும்                     (2692)

 

பதவுரை

பேர் ஆர் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை

(எப்போதும) யுத்ததிலே பொருந்தியிருக்கிற நீண்ட வேலாயுதத்தையுடையனான ஹிரண்யனுடைய உடலை

அரி உரு ஆய்

நரஸிம்ஹரூபியாகி

கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு

கூர்மை மிக்கு நெருங்கின திரு நகங்களாலே பிளந்து

குடல்

அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து)

சீர் ஆர் திரு மார்பின்மேல் மாலை கட்டி

அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு

செம் குருதி சோரா கிடந்தானை

சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை

குங்குமம் தோள் கொட்டி

குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு

ஆரா எழுந்தான்

ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன்,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொன் பெயரோன் –இது லக்ஷித லக்ஷணை, ஹிரண்யம் என்ற வடசொல் பொன் எனப் பொருள்படும்.

ஆரா –செய்யாவென்னும் வாய்பாட்டிறந்த காலவினையெச்சம், ஆர்த்து என்றபடி ஆரவாரஞ்செய்து.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top