ஏரா யிளமுலையீர் என்றனக் குற்றதுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி — கதிர்முலையை (2676)
வாரார வீக்கி மணிமெகலை திருத்தி
ஆராரயில் வேற்க ணஞ்சனத்தின் நீரணிந்து
சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன்
நான் நீரார் கமலம்போல் செங்கன்மால் என்றுருவன்
பாரோர்களெல்லாம் மகிழ பரைகரண்க
சீரார் குடமரியண்டெந்தி செழுந்தெருவெ (2677)
ஆரா ரெனைச் சொல்லி ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார் அன்னையிரும் அல்லரும்
வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால்
காரார் மணினிரமும் கைவளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றுதம் கொள்ளேன்- (2678)
பதவுரை
|
ஏர் ஆர் இள முலையீர் |
– |
அழகிய இளமுலைகளையுடைய மாதர்காள்! |
|
என் தனக்கு உற்றதுதான் |
– |
எனக்குநேர்ந்த ஸம்பவம் (யாதெனில் சொல்லுகிறேன் கேளுங்கள்) |
|
கார் ஆர் குழல் எடுத்து கட்டி |
– |
கரிய நிறமுடைய கூந்தலை (அலையவொண்ணாதபடி) மேலே தூக்கிமுடித்து |
|
கதிர் முலையை வார் ஆர வீக்கி |
– |
ஒளிமிக்க முலைகளைக் கச்சுநிறையும்படி நெருக்கிக் கட்டி |
|
மணிமேகலை திருத்தி |
– |
ரத்னங்களிழைத்த அரைநூல் மாலையை ஒழுங்குபட அணிந்து |
|
ஆர் ஆர் அயில் வேல் கண் |
– |
அழகு பொருந்திய கூரிய வேல் போன்ற கண்களை |
|
அஞ்சனத்தின் நீறு அணிந்து |
– |
மையின் சுண்ணத்தாலே அலங்கரித்து |
|
சீர் ஆர் செழு பந்து கொண்டு |
– |
மிகவும் அழகிய ஒரு பந்தைக் கையிற்கொண்டு |
|
நான் அடியா நின்றேன் |
– |
நான் அடித்துக்கொண்டிருந்தேன், (அப்படி யிருக்கையில்) |
|
நீர் ஆர் கமலம் போல் செம்கண் |
– |
தண்ணீரை விட்டுப் பிரியாத தாமரைப் பூப் போன்ற சிவந்த திருக்கண்களை யுடையனான |
|
மால் என்ற ஒருவன் |
– |
திருமால் என்று சொல்லப்படுகிற ஒரு புருஷன் |
|
பாரோர்கள் எல்லாம் மகிழ |
– |
உலகத்தாரனைவரும் மகிழும்படி |
|
பறை கறங்க |
– |
பறையென்ற வாத்யம் முழங்க |
|
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி |
– |
சிறந்த இரண்டு குடங்களைக் கையிலேந்திக்கொண்டு |
|
செழும் தெருவே |
– |
“இப்பெரிய வீதியிலே |
|
ஆர் ஆர் என சொல்லி |
– |
(எனது குடக் கூத்துக்குத் தப்பிப் பிழைக்கும் மாதர்) ஆரேனு முண்டோ? ஆரேனுமுண்டோ?“ என்று சொல்லிக்கொண்டு |
|
ஆடும் அது கண்டு |
– |
குடக்கூத்தாடின படியைக் கண்டு |
|
ஏர் ஆர் இள முலையார் |
– |
அழகிய இள முலைகளையுடைய மாதர்களும் |
|
தாய்மார்களும் (ஆகிய) பெண்டிர்களெல்லாரும் |
||
|
வாராயோஎன்றார்க்கு |
– |
“அடி! நீயுழ்காண வரமாட்டாயோ?“ என் றழைக்க அவர்கட்கு (உடன்பட்டு) |
|
என் பல் வினையால் |
– |
எனது கொடியபாவத்தினால் |
|
சென்றேன் |
– |
அவர்களுடன்கூடி அவ்விடத்தேறப்போனேன் (போனதும்) |
|
கார் ஆர் மணிநிறமும் |
– |
(முன்பு அவனோடு கலந்த்தனால் பெற்றிருந்த) நீலமணி நிறத்தையும் |
|
கை வளையும் |
– |
கையில் தங்கியிருந்த வளைகளையும் |
|
நான் காணேன் |
– |
நான் இழந்தவளானேன், |
|
ஆரானும் சொல்லிற்றும் |
– |
(உற்றாருறவினர்களில்) ஆராவது எதையாவது ஹிதமாகச் சொன்னால் அதையும் உதறித் தள்ளுபவளாயினேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இனி ஆழ்வார் பரகால நாயகி என்ற திருநாமத்தால் நிர்த்தேசிக்கப்படுவர் தன்னை வினவவந்த சில மங்கைமார்களை நோக்கித் தனது அவஸ்தையைக் கூறத் தொடங்குகின்றாள் பரகாலநாயகி. இதுதானும் பரகால நாயகியான தன்மையாலே சொல்லுவதல்ல க்ருஷ்ணாவதாரத்தில் குடக்கூத்திலே ஈடுபட்டு மெலிந்த ஒரு ஆய்ச்சின் தன்மையை அடைந்து சொல்லுவதாம். “காரார் சூழலெடுத்துக்கட்டி“ என்று தொடங்கி “அஞசனத்தின் நீறணிந்து“ என்னுமளவும் பந்தடிப்பதற்குத் தான் செய்துகொண்ட அலங்காரஙகளைக் கூறுகிறபடி. எனது அலங்காரத்தின் அமைதியைக் கண்டு ஈடுபட்டு என்னைப் புணரவேண்டி அவன்றான் மடலெடுக்க வேண்டியிருக்க, நானன்றோ மடலெடுக்க நேர்ந்தது! என்பது ஸூசனை, வார் – ரவிக்கை, மேகலை – ***** என்ற வடசொல் திரிபு, அரையி லணியும் ஆபரணம். அயில்-கூர்மை. அஞ்சனம்-வடசொல்.
இங்கே பந்து விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த்தாகச் சொல்லுகிற விதற்கு உள்ளுறைபொருள் யாதெனில் நான் பகவத் விஷயமே அறியாமல் ப்ராக்ருத பதார்த்தங்களிலே மண்டிப் போதுபோக்கிக்கொண்டு சுகமாகக்கிடந்தேன், அங்ஙனே கிடந்த என்னை அநியாயமாக பகவத் விஷயத்திலே கொண்டு மூட்டிக் துன்பப்படுத்தினார்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறபடி. பந்தானது செந்நூல் வெண்ணூல் கருநூல் களாலே கட்டப்படிருப்பதுபோல் ப்ரக்ருதியும் ஸத்வரஜஸ்தமோ குணங்களோடே விசித்திரமான கர்ம ஸூத்ரத்தலே கட்டப்பட்டிருக்கும். பந்து கீழே விழுவதும் மேலே எழுவதுமாயிருக்கிறாப் போலே ப்ரக்ருதியும்-அஜ்ஞனாய் அசக்தனான சேதநன் தான்செய்த கருமங்களுக்கேற்ப மேலுலகங்களில் போவதும் திரும்புவதுமாம்படி ஈச்வரன் தன் விளையாட்டுக்காகத் தன் ஸங்கல்பத்தாலே ப்ரேரிக்கத்தாழ விழுந்தும் உயரவெழுந்தும் சக்ரப்ரமம் போலே கழன்றும் போருகிற ஆத்மாவோடுண்டான ஸம்பந்தத்தினாலே தானும் விழுந்தெழுகை முதலான ஸ்வபாவங்களோடு கூடியதாயிருக்கும். ஆகவே, ஸ்வாபதேசத்தில் பந்து என்று ப்ரச்ருதியைச் சொல்லிக் குறையில்லை.
இப்படி அந்யபரையாய்க் கிடந்த என்னைச் சில பெண்டுகள் அழைத்துக் கொண்டுபோய்ப் படாதபாடு படுத்தினார்களென்கிறாள் மேல். தன்னிலத்தில் செழுமை மாறாது விளங்குகின்ற தாமரை போன்ற திருக்கண்களாலே எல்லாரையும் மதிமயக்கவல்லனாய், மால் என்றே திருநாம்முடையனான ஒரு விலக்ஷண மஹாபுருஷன் எல்லாரும் மனமகிழும்படிகுடக் கூத்தாடிக் கொண்டு “பெண்களே! எனது கோலத்தைக் கண்டீர்களா? இனி உங்களுடைய நாண்மடமச்சம் முதலிய குணங்களைக் காத்துக்கொள்ள முடியுமானால் நன்கு காத்துக்கொள்ளுங்கள்“ என்று சொல்லுவான் போன்ற்று வீதியார வருகின்றமையைக் கண்ட என் தாய்மார்களும் மற்றுமுள்ள பெண்களும் கடுக என்பால் ஓடிவந்து. ‘அடீ! ஈதென்ன விளையாட்டு!, எழுத்து ஓடிவா‘ என்றழைக்க, எனக்குப் போராத காலம் வலி தாயிருந்தபடியால் அவர்களது வார்த்தையை அலக்ஷியம் செய்திருக்க மாட்டாமல் பதறியெழுந்து ஓடிச்சென்றேன். அங்குச்சென்று சேர்ந்த க்ஷணத்தில்தானே நான் நிறமிழந்தேன், கையில் வளைகள் கழன்று விழுந்து போம்படி உடல் ஒரு துரும்பாக இளைக்கப் பெற்றேன், “இப்படிப்பட்ட காம நோய் உனக்கு உரியதன்று“ என்று நன்மை சொல்ல வந்தவர்களுடைய பேச்சையும் ஒரு பொருளாக மதியாமல் உதறித்தள்ளி விடும்படியான நிலைமையில் நின்றேன்.
(என் வல்வினையால்) இங்கு வல்வினையென்று பக்தியை சொல்லுகின்ற தென்பர்.
