(2673)& (2674)

காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை

சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்

நீராரவெலி நிலமண்கையென்னும் – இப்

பாரோர் சொலப்பட்டமூன்னன்றெ அம்மூன்று               (2673)

ஆராயில் தானே அறம்பொரு ளின்பமென்று                 (2674)

 

பதவுரை

கார் ஆர் வரை கொங்கை

மேகங்கள் நிறைந்து படியப்பெற்ற (திருமாலிருஞ்சோலையும் திருவேங்கடமுமாகிற) திருமலைகளை முலையாக உடையளாயும்.

கண் ஆர் கடல் உடுக்கை

இடமுடைத்தான (விசாலமான) கடலைச சேலையாகவுடையளாயும்.

சீர் ஆர் சுடர் சுட்டி

(ப்ரகாசமாகிற) சிறப்புப் பொருந்திய ஸூர்யனைச சுட்டியென்னும் ஆபரணமாக வுடையளாயும்.

செம் கலுழி பேர் ஆறு பேர் ஆரம் மார்பின்

சிவந்து கலங்கியுள்ள பெறிய ஆறுகளைச் சிறந்த ஹாரம் பூண்ட மார்பாக உடையளாயும்

பெரு மா மழை கூந்தல்

பெருத்துக் கறுத்த மேகங்களைக் கூந்தலாக வுடையளாயும்

ஆரம் நீர் வேலி

ஆவரண ஜலத்தைக் காப்பாக வுடையளாயுமிருக்கிற,

நிலம் மங்கை என்னும் இபாரோர்

ஸ்ரீ பூமிப்பிராட்டி யென்று சொல்லப்படுகிற இந்நிலவுலகத்திலே உள்ளவர்களால்

சொலப்பட்ட

கூறப்படுகின்ற (புருஷார்த்தங்கள்)

மூன்று அன்றே

மூன்றேயாம்,

அ மூன்றும் ஆராயில் அறம் பொருள் இன்பம் என்று

அம்மூன்று புருஷார்த்தங்கள் எவை யென்று ஆராய்ந்தால், தர்மம் அர்த்தம் காமம் என்பனவாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “காரார்வரைக் கொங்கை“ என்று தொடங்கி “நீராரவேலி“ என்ணுமளவம் பூமிப்பிராட்டியை வருணப்பதாம். பூமிப்பிராட்டியின் வருணனைக்கு இப்போது புருஷார்த்தங்களைப் பரிக்ரஹித்த சேதநர்களைச் சொல்லவேண்டிற்றாகி, அச்சேதநர்கள் இருக்குமிடத்தைச் சொல்ல வேண்டி அவர்கள் இருக்கப்பெற்ற பூமியைச் சொல்லப்புகுந்து அவ்வழியாலே அப்பூமிக்கு அபிமாநிநியான பூமிப்பிராட்டியை வர்ணிக்கிறாரென்க.

தான் வைவர்ணியப்பட்டு வருந்திக்கிடக்க, தனது சக்களத்தியாகிய பூமிபிராட்டி குறியழியாத அவயவங்களுடனே ஒழுங்காக இருக்கப்பெற்றாளே! என்ற உவகை தோன்ற வருணிப்பதாகச் சொல்லுவாரு முளர். இப்பரகால நாயகியும் பூமிப்பிராட்டியும் எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டவர்களாதலால் சக்களத்தி முறைமை யுண்டென்க.

பூமிப்பிராட்டி யென்றால் மங்கையர்க்கிய ஸ்ந்நிவேசங்கள் அவளுக்கு இருக்க வேண்டுமேயென்ன, அவ்வளவும் செவவ்னே உண்டு என்று மூதலிக்கிறார் ஆறு விசேஷணங்களினால். கறுத்த முலைக் கண்களையுடைய முலைகளின் ஸ்தானத்திலே மேகம்படிந்த மலைகள் உள்ளன வென்கிறார் முதல விசேஷணத்தாலே. இங்க, வரை என்று பொதுப்படக் கூறியிருந்தாலும் “தென்ன்னுயர்பெருப்பும் தெய்வ வடமலையுமென்னு மினவயே முலையா வடிவமைந்த“ என்று இவ்வாழ்வார்தாமே பெரிய திருமடலில் அருஹிச் செய்ததுகொண்டு திருமாலிருஞ் சோலைமலையும் திருவேங்கடமலையுமென்று சிறப்பாகக் கொள்ளலாயிற்று, சிறந்த மேரு முதலிய மலைகளை நிலமங்கைக்குக் கொங்கையாகச் சொல்லாமாயிருக்க அவற்றைவிட்டுத் தென் வடமலைச்சொன்னது – நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்குமிடமே முலையாகத் தகுதலால்.

அழகிய சேலையின் ஸ்தானத்திலே கடல் உள்ளதென்கிறார் இரண்டாவது விசேஷணத்தால் (ஸமுத்ராம்பரா) என்று வடமொழியிலே பூமிக்குப் பெயர் வழங்குமாறறிக. நெற்றிச்சுட்டியின் ஸ்தானத்திலே ஸூர்யனுளனென்கிறார் மூன்றாம் விசேஷணத்தால். மார்பின் ஸ்தாந்ததிலே பெரிய ஆறுகளும், அம்மார்பிலணியும் ரத்நயமான ஆபரணங்களின் ஸ்தாநத்திலே அவ்வாறுகளின் கலங்கிய செந்நீர்ப் பெருக்குகளும் உள்ளனவென்கிறார் நான்காம் விசேஷ்ணத்தால், மயிர்முடியின் ஸ்தானத்திலே நீர்காண்டேழுந்த காளமேகங்கள் உள்ளன வென்கிறார். ஐந்தாம் விசேஷணத்தால் இனி, சிறந்த மஹிஷி யென்றால் கட்டுங்கால்லுமாயிருப்பவே, அஃது இவளுக்கு முண்டோவென்ன, ஆவரணஜலமே இவளுக்கு காப்பெண்கிறார் ஆறாம் விசேஷணத்தால்

நீர் ஆரம் –வேலி ஆரம் என்றது ‘ஆவரணம்‘ என்ற வடசொல்லின் கிதைவு என்பர். அண்டத்துக்குப் புறம்பே பெருகிக்கிடப்பது ஆவரண ஜலம் என்றுணர்க. இப்படிகளாலே நிலமங்கை என்றற்கு உரிய இப்பூமியிலே வாழ்பவர்கள் புருஷார்த்தமென்று சொல்வது, அறம் பொருள். இன்பம் என்கிற தர்ம அர்த்த காமங்கள் மூன்றேயாம்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top