(3980)
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்
பூரண பொற்குடம் பூரித் த துயர்விண்ணில்
நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே
பதவுரை
|
நாரணன் தமரை கண்டு |
– |
பாகவதர்களைக் கண்டு |
|
நல் நீர் முகில் |
– |
நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது |
|
உகந்து |
– |
மகிழ்ந்து |
|
உயர் விண்ணில் |
– |
உயர்ந்த ஆகாசத்திலே |
|
பூரணம் பொன் குடம் பூர்த்தது |
– |
பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது; |
|
நீர் அணி கடல்கள் |
– |
நீரை வஹிக்கிற கடல்களானவை |
|
நின்று ஆர்த்தின |
– |
நிலைநின்று கோஷித்தன |
|
உலகு |
– |
அந்தந்த லோகங்களிலுள்ளார் |
|
எங்கும் தொழுதுனர் |
|
எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள் |
|
நெடுவரை தோரணம் நிரைத்து |
– |
பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-மேலுண்டான லோகங்கள் பண்;ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்; நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்களானவை நாராயணன் தமரைக் கண்டவுகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக அமைந்தன. கீழ்ப்பாட்டிலே சூழ்விசும்பணி முகில் தூரியமுழக்கினவென்று சொல்லியிருக்கச் செய்தேயும் அந்த ஒரு கிஞ்சித்காரமும் பண்ணினபோலும். “ஆகாசசரரான தேவர்களாலே ஆகாசமெல்லாம் பூர்ண கும்பம் வைக்கப்பட்டதென்றுமாம்’ என்பது ஈடு.
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன-நீரணிந்த கடல்களானவை ஒரு கால் ஆடினோமே யென்றிராமல் ஹா;ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்துக்கொண்ன். (நெடுவரையித்யாதி.) அந்தந்த லோகங்களிலுள்ளோர் பெரிய மலைபோலே யிருந்துள்ள தோரண ஸ்தம்பங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள். உலகு என்றது உலகர் என்றபடி; உயந்தோர் என்று பொருள்.
English Translation
On seeing Narayana’s devotee, the rain cloud joyously filled gold-pots in the sky, the oceans stood and cheered in joy. The mountains made festoons for him, and all the words bowed in worship
