(3971)
எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்
தெளிதா கியசேண் விசும்புதரு வானே
பதவுரை
|
கிளி தாவிய |
– |
கிளிகள் தாவம்படி செறிந்த |
|
சோலைகள் சூழ் |
– |
சோலைகளாலே சூழப்பட்ட |
|
திரு பேரான் |
– |
திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான், |
|
தெளிது ஆகிய |
– |
தெளிந்த நிலமான |
|
சேண் விசும்பு |
– |
பரமாகாச மென்னும் திருநாட்டை |
|
தருவான் |
– |
தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி) |
|
என் கண்கள் |
– |
(விடாய்த்த) எனது கண்கள் |
|
எளிது அயின ஆறு என்று களிப்ப |
– |
இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக |
|
களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன் |
– |
பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.
“கிளி தாவிய சோலைகள் சூழ்திருப்பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவான்” என்ற பின்னடிகளை முன்னம் யோஜித்துக்கொள்வது. முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்கள் கிளியோடொக்கச் சொல்லப்படுவர்கள்; அத்தகைய ஸத்புருஷா;கள் வாழுமிடமான திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் இருள் தருமா ஞாலம்போலன்றியே எப்போதும் தெளிவையே பண்ணக்கடவதான திருநாட்டை எனக்குத் தருவதாகத் துணிந்திருந்தான்; துர்வலபமான விஷயம் நமக்கு இங்ஙனே எளிதானபடி என்னே! என்று, முன்பு விடாய்த்திருந்த எனது கண்கள் களித்தன; சிந்தையுங் களித்தது என்றாராயிற்று.
English Translation
My eyes rejoice to see Him so easily, With lightness heart I too rejoice, Tirupper is surrounded by groves with sweet parrots. The Lord there will give us his clear Vaikunta
