(3959)
என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான்
இன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே?
பதவுரை
|
என் உயிரை முற்றும் உண்டு |
– |
என்னைப் பாரிபூர்ணாநுபவம் பண்ணி |
|
தென்னன் திருமாலிருஞ்சோலை |
– |
தென்னரசன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை மலை நிற்கிற |
|
(அவ்வளவோடும் நில்லாதே) |
||
|
திசை |
– |
திக்கை நோக்கி |
|
என் மாயம் |
– |
ஆக்கை இதனுள் புக்கு என்னுடைய ப்ராக்ருத சாரிரத்தினுள்ளும் புகுந்து |
|
கைகூப்பி சேர்ந்த யான் |
– |
அஞ்சலி பண்ணி அடிமைப் பட்ட நான் |
|
என்னை முற்றும் தானே ஆய் நின்ற |
– |
என்னுடைய தேஹாதியநு பந்திகளெல்லாம் தானே யென்னலாம்படி நின்ற |
|
இன்னம் போவேனே கொலோ |
– |
இனி இதுக்கவ்வருகு ஓர்டத்தேடிப் போக நினைப்பேனோ? |
|
மாயம் அம்மான் சேர் |
– |
மாயப்பிரான் பொருந்தி வாழ்கிற |
|
அம்மான் திரு அருள் என் கொல் |
– |
எம்பெருமானுடைய பாரிப்பு என்னாயிருந்தது! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
****- எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார். கீழ்ப்பாட்டில் “என்னை முற்று முயிருண்டே” என்று சொல்லியிருக்கவும் மீண்டும் “என்னை முற்றுமுயிருண்டு” என்றருளிச் செய்கிறார்; இஃது அந்தாதித் தொடைக்காக அருளிச்செய்வதன்று. உண்டு என்றொரு சொல்லையிட்டுத் தொடங்கினாலும் அந்தாதித் தொடைக்கு அமையுமே. மறுபடியும் “என்னை முற்றுமுயிருண்டு” என்கையாலே, ஆழ்வாரை யநுபவிக்கை எம்பெருமாளுக்குப் பெறாப்பேறு பெற்றதாயிருக்கையாலே, அதையறிந்துகொண்டு தெகுடாடிச் சொல்லுகிறபடி. இங்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார் – “*யஸ்ய ஸா ஜநகாத்மஜா – அப்ரமேயம் ஹி தத் தேஜ:* என்கிற ஏற்றத்தோபாதியும் போருமாய்த்து இவருயிரை எங்கும் புக்கு அநுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம்” என்று. இதன் கருத்தாவது – எம்பெருமாளுக்கு லஷ்மீ ஸம்பந்தத்தினால் எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு ஏற்றம் ஆழ்வாரை யநுபவிப்பதனால் உண்டு என்பதாம்.
என் மாயவாக்கை – என்னுடைய ஆத்ம வஸ்துவை யநுபவித்து அவ்வளவோடே பரியாப்தி பெறுபவனாயிருந்தானோ? *அழுக்குடம்பு என்றும் *பொல்லா வாக்கை யென்றும் சொல்லுகிறபடியே ஹெயமென்று இவர்தாம் அருவருத்து இகழா நிற்கச் செய்தே அவன் இதில் பரமபோக்யதாபுத்திபண்ணி மேல்விழா நின்றான். என்னை முற்றும் தானேயாய் – இப்படி ஆத்மவஸ்துவிலும் அசித்தான தேஹத்திலும் புக்கு வியாபிக்கையாலே தானே யென்னத் தட்டில்லை. நான் என்னும்படியான ஆத்மவஸ்துவும், என்னது என்னும்படியான தேஹமும் தனிப்படக் காணமுடியாததாகி அவனேயென்ன நின்றதாயிற்று. ஆக இப்படியாயிரா
நின்றமாயவம்மான் விரும்பி வர்த்திக்குமிடமான திருமாலிருஞ்சோலை மலையுள்ளதிக்கை நோக்கிக் கைகூப்பப் பெற்றேன்; அதாவது, அவனை யுகந்து, அவ்வழியாலே அவன் விருமபினதேசத்தை யுகந்து, அத்தோடு ஸம்பந்தமுடைய திக்கை யுகந்து இப்படி ஸம்பந்தி ஸம்பந்திகள் வரையிலும் உகப்பு பெருகிச் செல்லும்படி அவகாஹித்தேன். இப்படிப்பட்ட நான், இன்னம் போவேனே கொலோ!-இத்திருமாலிருஞ் சோலையுள்;ள திசைக்கு அப்பால் வேறொரு போக்கிடமுடையேனோ?
(என்கொல் அம்மான் திருவருளே!) என்னோடு எவ்வளவு கலந்து பாரிமாறலாமோ அவ்வளவும் கலந்து பாரிமாறியான பின்பும் இன்னமும் பாரியா நின்றாள்! அந்தோ! ஈதென்ன திருவருள்! என்று அலமருகின்றாராயிற்று.
English Translation
My Lord resides in Malirumsolai devouring me. He entered my wondrous speech, then made me all himelf. How great is his grace! I told my hands in worship, need I say more?
