(3950)

(3950)

வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே

நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே

தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை

தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே.

 

பதவுரை

வான் ஏற வழி தந்த

அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக விருக்கிற

பணி வகையே

பண்டு பணித்திருந்தபடியே

வாட்டாற்றான்

திருவாட்டாற்றெம்பெருமான்

நான் ஏற பெறுகின்றேன்

நான் மேலே செல்லப் பெறாநின்றேன்.

நெஞ்சே நரகத்தை நகு

மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச்

சிரித்திடுசெழு பறவை தான் ஏறி

அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய

தேன் ஏறு மலர்துளபம் திகழ் பாதன்

தேன் மிகுந்த துளவமலர்விளங்கும் திருவடிகளை யுடையனாய்

திரிவான தாள் இணை

என் தலை மேலே

உபயபாதங்கள் என் தலை மேலாயின

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார்.  திருவாட்டாற்றெம் பெருமாளுக்கு “வானேற வழிதந்த” என்றே நிருபகம்போல அருளிச்செய்கிறார் காண்மின், வானேறு வதற்கான வழி – அர்ச்சிராதி மார்க்கம்.  *முத்தோர்ச்சிரி திநபூர்வபஷ ஷடுதங்மாஸே த்யாதியாக நடாதூரம்மாளருளிச்செய்தது காண்க.  *நடைபெறவங்கிப் பகலொளி நாளுத்தராயணமாண்டு*  இத்யாதியானவொரு பாசுரமுங்காண்க.  வானேறும் வழியைத் தரவிருக்கிறானேயல்லது தந்துவிட வில்லை;  ஆயிரம் தந்த வென்று இறந்தகாலமாகக் கூறினது அதற்கு றம்பற்றியென்க.

பணிவகையே நானேறப் பெறுகின்றேன் – அவன் கீதையிலே *மோஷயிஷ்யாமி மாசுச* என்று பண்டே சொல்லிவைத்திட்டானே; அப்பேறுதன்னை விரைவில் நான் பெறவிருக்கின்றேனென்று திருவுள்ளத்தைக் குறித்துக் கூறினாராழ்வார்; அதற்கு நானென்ன செய்யவேண்டுமேன்று திருவுள்ளம் கேட்க நரகத்தை நகு நெஞ்சே! என்கிறார்.  நெடுநாளாக நம்மை ஸம்ஸாரியாக்கி யெளிவரவுபடுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்துச் சிரி;  உன்னை அடியறுத்தோமே யென்று சொல்லிச் சிரி என்கிறார்.  பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ; அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம்பற்றித் திருமாலை திருப்பாரிவட்டம் முதலான வாரிசைகளை வரவிட்டருளினவளவிலே “நானேறப்பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப்பார்த்துச் சிரித்தாராம்.  “நரகத்தைநகு” என்ற இவ்விடத்திற்கு நரகலோகத்தைப்பார்த்துச் சிரியென்று சிலர்பொருள் கூறுவர்; அதுவேண்டர் ஸம்ஸாரத்திற்கே நரகமென்று பெயராதலால் ஸம்ஸார பூமி யென்கிற பொருளே இங்குக் கொள்ளத் தகும்.

பேறு கைப்புகுந்தாலன்றோ நரகத்தைச் சிரிக்கலாம்; அது கைபுகுந்து விட்டதோ வென்ன் அதில் ஸந்தேஹமென்? என்கிறார் பின்னடிகளால்.  எம்பெருமான் தாளிலணிந்த துளபமாலையுடன் பெரிய திருவடியின்மேலேறி வந்து நின்று ஸேவை ஸாதிக்கின்றானே, இனி நான் வானேறுவதில் ஐயமுண்டோ என்பது பின்னடிகளின் பரமதாற்பாரியம்.  தேனேறு மலர்த்துளவந் திகழ்பாதன் – *தேனே மலருந் திருபாதம்* என்றபடி எம்பெருமானுடைய திருவடிகளில் தேன் வெள்ளமிடுமே; *விஷ்ணோ: பதே பரமெ மத்வ உத்ஸ.* என்று வேதமும் ஓதிற்றே; அந்தத் தேனும் திருத்துழாயில் ஏறித் தேனேறு  மலர்த்துளவமாயிற்றென்க.   செழும் பறவை தானேறி –  *பறவையேறு பரம்புருடா! நீயென்னைக் கைக்கொண்டபின்* என்கிறபடியே ஆழ்வாரைக் கைக்கொள்கைக்கு செழும்பறவை மீதேறி வந்தானாயிற்று திரிவான – திரிவானுடைய் அ-ஆறாம் வேற்றுமையுருபு; பெரிய திருமொழியில் (8.7.10) *கலியன தமிழிவை* என்ற பிரயோகமுங்காண்க.  தாளிணை என்தலை மேலே – பெரிய திருவடியின் தோளிலேயிருந்த திருவடிகள் தம் தலை மேலேயேறப்பெற்ற அதிசயம் என்னே! என்று வியக்கிறார்.

 

English Translation

The Lord of Tiruvattaru gave me the path of liberation at his behest, I have his feet on my head.  The Lord wears honey-dripping Tulasi and rides the Garuda. Now you can laugh at Hell, O Heart of mine!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top