(3844)
ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்
காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.
பதவுரை
|
பேர் இதழ் தாமரை கண் |
– |
பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் |
|
கனி வாயது ஓர் |
– |
கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு |
|
சார் எழில் மேகம் |
– |
கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு |
|
தென்காட்கரை கோயில்கொள் |
– |
திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட |
|
சீர் எழில் நால் தட தோள் |
– |
அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய் |
|
தெயவம் வாரிக்கு |
– |
தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு |
|
எனது உயிர் பட்டது |
– |
என்னாத்மா பட்டபாடு |
|
ஆர் உயிர் பட்டது |
– |
வேறு யாருடைய ஆத்மா பட்டது? (நான் பகவத் விஷயத்தில் பட்டபாடு ஒருவரும் படவில்லை யென்கை) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– கீழ்ப்பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில். எனுயிர் பட்டது ஆருயிர் பட்டது?=நான் பட்ட பாட்டை நித்யஸுரிகளிலேதான் பட்டாருண்டோ? குணுநுபவனே யாத்ரையான நித்யஸுரிகளும் இப்பாடு பட்டிலரே. “இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது” என்று எம்பெருமானாரருளிச் செய்வாராம். ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்; [பேரிதழ்த் தாமரைக்கண் கணிவாயதோர்] திருக்கண்களும் திருவதரமும் படுத்தினபாடு [காரெழில்மேகத் தென்காட்கரை கோயில் கொள்] வடிவுபடுத்தின பாடும் கோயில் படுத்தின பாடும் [சீரெழில் நாற்றடந்தோள்] கற்பகக் காவன நற்பல தோள்கள் படுத்தின பாடு.
தெய்வவாரி–எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் இதுவுமொன்று; வாரி யென்னும் வட சொல் ஜலத்தைச் சொல்லுமதானாலும் ஜலநிதியான கடலைக் குறிக்குமிங்கு. தைவங்கள் படுங் கடல்; தைவங்களுக்கு உத்பாதகன்றபடி. “தெய்வவாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது” என்று அந்வயம்.
English Translation
My dark hued Lord at Tirukkatkarai has lotus eyes and coral lips, four arms and a godly radiance. Which other soul does he torture like he does mine?
