(3775)
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு தன்கேழில், புகர்ச்செம்
முகத்த களிறட்ட பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள் நீண்ட அசுர ருயிரெல்லாம்,
தகர்த்துண் டுழலும் புட்பாகன் பெரிய தனிமாப் புகழே?
பதவுரை
|
தன் கேழ் இல் |
– |
தனக்கு ஒப்பின்றியே யிருப்பதாய் |
|
புகர் |
– |
புகரை யுடைத்தாய் |
|
செம்முகத்த |
– |
சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைத்தான |
|
களிறு |
– |
(குவலயாபீட மென்கிற) யானையை |
|
அட்ட |
– |
கொன்று முடித்தவனும் |
|
பொன் ஆழி கை |
– |
அழகிய திருவாழி மோதிர மணிந்த திருக்கையை யுடையவனும் |
|
என் அம்மாள் |
– |
எனக்கு ஸ்வாமியும் |
|
நிகர் செம் பங்கி |
– |
தங்கள் ஜாதிக்குத் தகுதி யாகச் சிவந்த செம் பட்ட) மயிர்களையும் |
|
எரி விழிகள் |
– |
அக்நி சக்ரம் போன்ற கண்களையுமுடயராய் |
|
நீண்ட |
– |
பருத்த வடிவு படைத்தவர்களான |
|
அசுரர் |
– |
அசுரர்களினுடைய |
|
உயிர் எல்லாம் |
– |
பிராணன்களை யெல்லாம் |
|
தகர்த்து உண்டு |
– |
பிடித்த வாங்கி |
|
உழலும் |
– |
இதுவே தொழிலாக ஸஞ்சரிக்கிற |
|
புள் |
– |
கருடனுக்கு |
|
பாகன் |
– |
நியாமகனுமான எம்பெருமானுடைய |
|
பெரிய தனி மா புகழ் நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு |
– |
பெரிய ஒப்பற்ற கல்யாண குண ராசியை அநுபவிக்கையோடு ஒக்குமோ ஸர்வேச்ரத்வம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமாகவே இப்பாட்டுமருளிச் செய்யப்படுகிறது. எம்பெருமானுடைய ஒப்பில்லாத விலக்ஷணமான புகழைத் திருவாய்மொழியாலே நுகருமதுக்கு விபுவான அவன்றன்னுடைய ஆனந்தமும் ஒவ்வாதென்கிறார்.
“தன் கேழில் புகர்ச்செம்முகத்தகளிறட்ட பொன்னாழிகை யென்னம்மான்“ என்பதனால், கம்ஸனாலேவப்பட்ட குவலாபீட மென்னும் மதயானையின் நிரஸமும், “நிர்ச்செம்பங்கி யெரிவிழிகள் நீண்ட வசுர்ருயிரெல்லாம் தகர்த்துண்டுழலும் புட்பாகன்“ என்பதனால் கொடிய வசுரர்களின் நிரஸநமும் சொல்லப்பட்டு, இப்படி விரோதி நிரஸந சீலனான எம்பெருமானுடை திருக்குணங்களை பாகவத ப்ரீதிகரமான திருவாய்மொழி முகத்தாலே அநுபவித்து ரஸிக்கைக்கு, மூவுலகின் வீடுபேறு உறுமோ? – ஸர்வேச்வரத்வம் ஈடாகுமோ?
மூவுலகின் வீடு –மூவுலகங்களையும் காண விடுகை, அதாவது ஸ்ருஷ்டிக்கை, அது வாகிற பேறு –ஸர்வேச்வரத்வ மென்றபடி. ஈட்டு ஸ்ரீ ஸூக்தி –“மூவுலகின் வீடு பேறு தன் ஸங்கல்பைகதேசத்தாலே ஜகத்ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களாம்படியிருக்கிற ஐச்வர்யம்.“
English Translation
The wealth of the three worlds and the enjoyment of one’s self in heaven, put together, -will it equal the joy I have found here and now, through serving the selfless devotees of the cloud-hued Lord’s lotus-feet?
