(3767)

(3767)

பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான்,

விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப,

கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும்,

புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே.

 

பதவுரை

பனி நீர் நிறம் கண்ணபிரான்

குளிர் நீர் நிறத்தனான கண்ணபிரானுடைய,

விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி

கலந்து நிரம்பின இசையையுடைய வேதங்களை வைதிகர் சொல்லுவதாலுண்டான ஒலியானது

வேலையின் நின்று

கடல்போல் முழங்க

கரவு ஆர் தடம் தொறும்

முதலைகள் மிக்கிருந்துள்ள பொய்கைக்ள் தோறும்

தாமரை கயம்

தாமரைத் திரள்கள்

தீவிகை நின்று அலரும்

நிலைவிளக்குப்போலே அலராநிற்குமிடமாய்

புரவு ஆர் கழனிகள் சூழ்

ஸாரம் மிக்க கழனிகளாலே சூழப்பட்டதான

திருப்புலியூர்

திருப்புலியூரினுடைய

புகழ் அன்றி

புகழொழிய

இவள் இராப்பகல் நின்று மற்று பரவாள்

இத்தலைவி இரவும் பகலும் வேறொன்றைச் சொல்லுகின்றாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி. திருப்புலியூரின் புகழைப் பேசுவதாவது, அத்தலத்திலுறையும் பெருமானது வடிவழகைப் பேசுவதும், அங்குள்ள பாகவதர்களின் வேதகோஷம் முதலியவற்றைப் பேசுகையும், ஊரின் நீர்வள நிலவளங்களைப் பேசுவது மேயாதலால் இவை மூன்றையும் பேசுகின்றாளென்பது முறையே மூன்றடிகளாலும் தெரிவிக்கப்பட்டது.

பனிநீர்க் கண்ணபிரானென்பதனால் திருப்புலியூர்ப்பெருமானுடைய வடிவழகும் சில குணமும் சொல்லிற்று. வைதிகர்களின் வேதகோஷம் கடல்போல் முழங்கும் பெருமை இரண்டாமடியிற் சொல்லிற்று. முதலைகள் மிக்க பொய்கைகள் தோறும் தாமரைகள் நிலைவிளக்கெரியுமாபோலே மலராநிற்குமழகு மூன்றாமடியிலே சொல்லிற்று. ஆக இவையே இவளுக்கு வாய்வெருவுதலாயிருத்தலால் அத்தலத்தெம்பெருமானோட்டைக் கலவி இவளுக்கு நேர்ந்திருக்கவேணுமென்றாளாயிற்று.

 

English Translation

Night and day she speaks only of the cloud-hued Lord who resides in Tiruppuliyur surrounded by fertile fields, where alligator ponds are aflame with red lotus blooms, and sounds of beautiful music rise with Vedic Chants incessantly

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top