(3758)
தெருளும் மருளும் மாய்த்துத்தன் திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம் அண்ணல் கருமா ணிக்கமே.
பதவுரை
|
தெருளும் மருளும் மாய்த்து |
– |
ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து |
|
தன் |
– |
தன்னுடைய |
|
திருந்து செம்பொன் கழல் அடி கீழ் |
– |
அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே |
|
அருளி இருத்தும் |
– |
பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற |
|
அம்மான் ஆம் |
– |
ஸ்வாமியாய் |
|
அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால் |
– |
பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே |
|
அருளப்பட்ட |
– |
மயர்வற மதிநலமருளப்பெற்ற |
|
சடகோபன் |
– |
நம்மாழ்வாருடைய |
|
ஓர் ஆயிரத்துள் இ பத்தால் |
– |
ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக |
|
நம் அண்ணல் கருமாணிக்கம் |
– |
கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி |
|
(இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) |
||
|
அருளி அடி கீழ் இருந்தும் |
– |
கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். தெருளும் மருளும் மாய்த்து –தெருளாவது ஞானம். மருளாவது அஜ்ஞானம், மருளைமாய்க்கலாமேயல்லது தெருளையும் மாய்க்கலாமாவென்று சங்கை தோன்றும். மருள் கலசாத தெருள் உத்தேச்யமேயொழிய மருளோடு கலசிவருகிற தெருள் உத்தேச்யமன்றே, அப்படிப்பட்ட தெருளையே மாய்த்ததாக இங்குச் சொல்லுகிறது. “ஸ்வாநுபவவிரோதியான ப்ராக்ருத விஷயஜ்ஞாநாஜ்ஞாநங்களை வாஸநையோடே போக்கி“ என்பது ஈடு. தன்திருந்து செம்பொற் கழலடிக்கீழருளியிருத்தும் –அடியார்களை வேறொருவர் காலில் குனியவிடாமல், ஸ்ப்ருஹணீயமாய் வீரக்கழலையுடைத்தான தன் திருவடிகளின்கீழே நிர்ஹேதுக கிருபையினால் ஸ்தாபிக்குமியல்வின் எம்பெருமானென்க. அயனாம் சிவனாம் திருமால் -* மூவர்காரியமுந்திருந்தும் முதல்வன் * என்று பெரியாழ்வார்ருளிச் செய்தபடி ஸ்ருஷ்டி ஸம்ஹாரத்தொழில்களை நிர்வஹிக்கைக்காப் பிரமனையும் சிவனையும் அநுப்ரவேசித்திருக்கும் திருமால் என்றபடி. எம்பெருமானாலே மயர்வறமதிநலமருளப்பெற்ற ஆழ்வார்ருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும் வல்லாரை அப்பெருமான் அருளித் தன் திருவடிகளின் கீழ்ப் பணிசெய்யக் கொண்டருள்வனென்று
English Translation
This decad of the thousand songs by Satokapan, blessed by the Lord who destroys knowledge and nescience, the Lord who is Brahma, Siva and Indra, secures the lotus feet of the black-gem Lord
