(3752)

(3752)

நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக் கதனுள் நேர்மை அதுவிதுவென்று,

ஒன்றும் ஒருவர்க் குணரலாகா துணர்ந்தும் மேலும் காண்பரிது

சென்று சென்று பரம்பரமாய் யாது மின்றித் தேய்ந்தற்று,

நன்று தீதென் றறிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே.

 

பதவுரை

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு

நித்யமாய் ஜ்ஞாநைதஸ்வரூபமான ஆத்ம வஸ்துவை எம்பெருமான் தனக்கு ப்ரகாரமாகக் காட்டிக்கொடுக்கக் கண்ட எனக்குப்போலே

அதன் நுண் நேர்மை

அவ்வாத்மஸ்வரூபத்தின் ஸூக்ஷ்ம்மான வைலக்ஷணயம்

அது இது என்று

அப்படிப்பட்டது இப்படிப்பட்டதென்று

ஒருவர்க்கு ஒனறும் உணரல் ஆகாது உணர்த்தும்

மாஞானியர்க்கும் சிறிதும் அறியப்போகாது, வருந்தி ஒருவாறு அறிந்தாலும்

மேலும் காண்பு அரிது

ஸாக்ஷாத்கரிக்கப்போகாது,

சென்று சென்று பரம்பரம் ஆய்

ஒன்றுக்கொன்று மேற்பட்ட தாகி

யாதும் இன்றி தேய்ந்து அற்று

அவற்றின் ஸ்வபாவம் ஒன்றுமின்றிக்கே அவற்றோடு தொற்றற்று

நன்று தீது என்று அறிவு அரிது ஆய்

ப்ராக்ருதங்களுக்குண்டான நன்மை தீமைகள் அறியவரிதாய்

நன்று ஆய்

ஸர்வ விலக்ஷணமாய்

ஞானம் கடந்தது

அவற்றைப் பற்றின ஞானத்திற்கு விஷயமன்றியே யிருந்தது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானது திருவருளால் நானறிந்த ஆத்மவஸ்து வேறொருவர்க்கு மறியக்கூடியதன்று, அறிந்தாலும் ஸாக்ஷாத்கரிக்கக்கூடியதென்று என்கிறதிப்பாட்டில். நின்ற வொன்றையுணர்ந்தேனுக்கு –தேஹமென்ன, இந்திரியமென்ன, இவையழிந்தாலுங்கூட அழியாதேயிருந்து இவற்றக்கு நியாமகனுமாய் விலக்ஷணமான ஆத்மாவை (ஆத்மஸ்வரூபத்தையென்றபடி) எம்பெருமான் காட்டிகொடுக்கக் கண்ட வெனக்குப் போவென்றபடி எம்பெருமான் ஆஸ்மஸ்வரூபத்தைத் தனிப்படக் காட்டிக்கொடுத்தானா? அல்லது தனக்கு ப்ரகாரமாகவே காட்டிக்கொடுத்தானா? என்னும் விசாரத்தில் இரண்டு படியாகவும் ஆசார்யர்களின் நிர்வாஹமுண்டு, தனிப்படக் காட்டிக்கொடுத்ததாக எம்பாருடைய நிர்வாஹம். ப்ரகாரமான வேஷத்திலே காட்டிக்கொடுத்ததாக ஆண்டானுடைய நிர்வாஹம். இரண்டுபடிம் ஸங்கதமேயென்கை. “உணரப்பெற்றாராகத் தோன்றுகிறது, * மயாவறமதிநலமருளப்பெற்ற போதே இதையும் உணர்ந்தாராகவேண்டும், அப்போது உணர்ந்திலர் என்று  சொல்லப்போகாது, ஆனாலும் * உயர்வறவுயர்நல முடையவன் * என்று அவனுடைய திருக்கல்யாண குணாநுபவத்திலே யிழிந்தவராகையாலே மின்மினிபோலே யிருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தில் இதற்கு முன்பு கண்வைத்திலர், பக்திரூபாபந்நஜ்ஞானமுடைமையாலே இத்தை அநுஸந்திக்கைக்கு அவகாசமும் பெற்றிலர். இப்போது கீழ்த்திருவாய்மொழியில் இவர் “சிறியேனுடை“ என்று சொன்ன ப்ரஸங்கத்தாலே சிறிதான ஆத்மஸ்வரூபத்தின் பெருமையை நினைப்பூட்டவேண்டியது எம்பெருமானுக்கு ப்ராப்தமாகவே அவன் உணர்த்த உணர்ந்ததாக இங்கு அருளிச்செய்கிறபடி.

உணரப்புக்கவாறே இது இருந்தபடி என்! என்று வியந்து அருளிச்செய்கிறார் அதுனண்ணேர்மை இத்யாதியால். “அதனுள் நேர்மை“ என்றும், “அதன் நுண் நேர்மை“ எப்படிப்பட்ட மாஞானியர்க்கும் ஏகதேசமுமறிப்போகாதென்றபடி. உணர்ந்து மேலுங்காண்பரிது – அறந்தால் பின்னை ஸாக்ஷாத் கரிக்கவும் போகாது.

எம்பெருமான் காட்டிக் கொடுக்கக் கண்ட தமக்குத் தெரிந்தபடியை விவரித்துரைக்கிறார் பின்னடிகளில், சென்று சென்று பரம்பரமாய் –தைத்திரீயோபநிஷத்தில் முதலில் அந்நமயனைச் சொல்லி, அதற்கு மேல் ப்ராணமயனைச் சொல்லி, அதற்குமேல் மநோமயனைச் சொல்லி அதற்கு மேலாக •••  ஆத்ம ப்ரஷ்தாவம் செய்திருப்பதால் அதையிட்டுச் சென்று சென்று பரம்பரமாய் என்னப்பட்டது. ஒன்றுக்குமே லொன்றாகச் செலுகிற ச்ரமத்திலே மேம்பட்ட தென்றபடி. என்னப்பட்டது. ஒன்றுக்குமே லொன்றாகச் சொல்லுகிற அதையிட்டுச் சென்று சென்று பரம்பரமாய் என்னப்பட்டது ஒன்றுக்குமே லொன்றாகச் சொல்லுகிற க்ரமத்திலே மேம்பட்டதென்கிறபடி படியே ••• தேஹமென்ன இந்திரியமென்ன மநஸ்ஸென்ன ப்ராண னென்ன புத்தியென்ன இவற்றிற் காட்டிலும் மேம்பாட்டிருக்கின்றமை சொன்னவாறுமாம். யாதுமின்றி -அவ்வற்றியாதுமின்றி- அவற்றிலுடைய காட்டிலம் மேம்பட்ருக்கின்றமை சொன்னவாறுமாம். யாதுமின்றி அவற்றினுடயே விகாரஸ்பாவமொன்று மின்றியே, தேய்ந்தற்று –அவற்றோடு ஸம்பந்தலேசம்மற்று என்றபடி. நன்று தீதென்று அயிவரிதாய் – ப்ராக்ருதமாகையாலெ நன்றென்றும் தீதென்றும் அறியவொண்ணாத மிகவும் புஷ்பம் நன்று கரி தீது என்ற்றிகிறோம், தேன்மாங்களினையும் வேப்பங்காயையும் கையிற்கொண்டு பார்க்கும்போதும் அங்ஙனெயறிகிறோம், இந்திய கோசர மாகையாலே அப்படி யறிகிறோம். இங்கு அதற்கு ப்ரஸித்தியில்லாதமயாலேஅவ்வறிவு உண்டாகமாட்டாதென்க. “நன்று தீதெதன்று அறிவரிது“ என்று சொல்லிவைத்து உடனே “நன்றாய்“ என்கிறது –ஸர்வப்ரதகாரத்தாலும் வ்யாவ்ருத்தமான ஜ்ஞாநாத் ஞானத்திற்கு எடுத்தது என்றபடி. ஆக ஞன்னத்திற்கு எட்டாத்து என்றபடி. ஆக இப்படிப்பட்ட ஆத்மாஸ்வரூப வைலக்ஷண்யத்தை யாயிற் ஆழ்வரக்க பாருண்ள் சாட்டித் தந்து.

 

English Translation

I have realised the permanent one, whose nature is so subtle, he cannot be spoken of as ‘this’ or ‘that’, much less be seen.  Becoming finer and finer till nothing remains attached, he transcends good and bad, and transcends all knowledge

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top