(3729)
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே.
பதவுரை
| தேசம் அமரர் |
– |
தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய் |
| வாசம் பொழில் மன்னு |
– |
பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான |
| திருக்கடித் தானத்தை |
– |
திருக்கடித்தான மென்னும் தலத்தை |
| கோயில் கொண்டான் மாயப்பிரான் |
– |
கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான் |
| என வல் வினை மாய்ந்து அற |
– |
என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக |
| நேசத்தினால் |
– |
அன்புடனே |
| நெஞ்சம் நாடு குடி கொண்டான் |
– |
என்னெஞ்சாகிற நாட்டைத் தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தரவாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார். ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய பெருமான் தன்னைப்பிரிந்து நான் பட்ட கிலேசமெல்லாம் தீரும்படி, (அதாவது) கீழ் * மாயக் கூத்தாவென்கிற பதிகத்தில் * காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்துபட்ட விடாயெல்லாம் தொலையும்படி என்னுடைய நெஞ்சமாகிற நாட்டிலே குடிகொண்டான் – நித்யவாஸம் பண்ணாநின்றான், நானுகந்த விடமென்று திருக்கடித்தானத்தையும் கோயில்கொண்டிராநின்றான். திவ்யதேசங்களில் பகலுமிரவும் பூர்த்யாக ஸேவை தந்தருளாமையாலே பகலில் மாத்திரமே அங்கு வாஸமென்னவேண்டியிருந்தது. என்னெஞ்சில் அப்படியன்றிக்கே நிரந்தரவாஸமுள்ளது.
நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும். இங்கு ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத்விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“
மூன்றாமடியில் தேசம் – தேஜஸ் என்னும் வடசொல் விகாரம்.
English Translation
The wonder-Lord who cut my wicked karmas has made my loving heart his cool abode. He lives in the midst of the radiant gods in Tirukkadittanam surrounded by fragrant groves
