(3728)

(3728)

ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,

உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,

திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,

மருவி யுரைகின்ற மாயப் பிரானே.

 

பதவுரை

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று

(இலங்கையில் மூல பலத்தை முடிக்குமிடத்து) முதலில் ஒருவனாய், பின்பு இருவராய், பின்னையும் மூவராய்த் தோன்றி நின்று (பின்னையும்)

உருவு காத்து

ரூபம் இலக்குக் குறிக்க வொண்ணாதபடி இந்திரியத்திற்கு அவிஷயமாகி

செருக்குத்தன்சு திகைத்த வரைக்கரை உருக்கெட வாளி யொழிந்த வொருவன்

திரு அமர் மார்வன்

லக்ஷிமியைத் திருமார்பிலே யுடையனாய்க் கொண்டு

திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான்

திருக்கடித்தானத்தே பொருந்தி நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சர்ய சீலனான எம்பெருமான்

உள்ளுந்தோறும் தித்திப்பான்

நினைக்குந்தோறும் இனியனாகா நின்றான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டு தனிப்பட அந்வயிக்கமாட்டாது, கீழிரண்டாம் பாட்டுக்கு சேஷபூதமாகியே அந்வயிக்கும். அப்பாட்டின் பின்னடிகள் “செருக்கடுத்தன்று திகைத்தவர்க்கரை உருக்கெட வாளியொழிந்த வொருவனே” என்றுள்ளது. அப்படி வாளியொழிந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகனார் இருந்தவிதம் இப்படிப்பட்ட தென்கிறது இப்பாட்டில். “வாளிபொழிந்தபடி எங்ஙனே யென்ன ஈங்ஙனே யென்கிறார்“ என்பது ஈட்டு அவதாரிகை.

ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவு கரந்து – ஸ்ரீ ராமாயண யுத்தகாண்டத்தில் (ஸர்க்கம் -94) மூல பல வதம் சொல்லுமிடத்து இந்த நிலைதெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாள் காந்தர்வாஸ்த்ர ப்ரயோகம் பண்ணின வளவிலே (ச்லோ-26). ••• தத்ருசிரே ராமம் தஹந்த  மரிவாஹிநீம், மோஹிதா பரமாஸ்க்ரேண காந்தர்வேண மஹாத்மநா.) என்று அரக்கர்கள் இராமனை அடியோடு காணவில்லையென்று முதலிலே சொல்லிற்று.

இங்கு இருபத்தினாலாயிரப்படி வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் காண்மின் – “ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று கீழோடே அந்விதமாகக் கடவது. மூல பலம் சாகும்படி. அருளுகிறவன்று முந்துற வொருவனாய்த் தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த் தோற்றி வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூப்க்ரஹணம் அரிதாய் – உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று அந்வயம்.“

(திருவமர் மார்வன் திருக்கடித்தானத்தை மருவியுறைகின்ற மாயப்பிரான் உள்ளுந்தோறும் தித்திப்பான்) பெரிய பிராட்டியாரோடு கூடியிருக்கச் செய்தேயும் அவளைவிட்டு அவள் பரிகரமான என்னிடத்தலே ப்ராவண்யங்கொண்ட பெருமான் நானுகந்தவிடமென்று திருக்கடித்தானப் பதியை யுகந்து எனக்குப் பரமபோக்யனாயிரா நின்றானென்கை.

 

English Translation

The Lord was one, then two, then became three, then mingled himself into all, sweetly in my heart.  The wonder-Lord resides in Tirukkadittanam with the dame-of-lotus Lakshmi on his chest

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top